மலேசியாவில் கடும் வெள்ளம்: தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், 21,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

Malaysia flood
Ahmad Saifullah Sulong/via REUTERS

மலேசியாவின் மிக மோசமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 21,000க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் சிலாங்கூரில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 19) தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் பாதிப்பால் ஊழியர் தங்கும் விடுதிகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? – அமைச்சர் பதில்

வீடு மற்றும் உள்கட்டமைப்புப் பழுதுபார்ப்பிற்காக மலேசிய அரசாங்கம் RM100 மில்லியன் ஆரம்பத் தொகையை ஒதுக்குவதாகவும், மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்கும் என்றும் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார்.

குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடிய விரைவில், வெள்ள நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க அனைத்து அமைச்சகங்களுக்கும் அறிவுறுத்தியதாக முகநூல் பதிவில் அவர் கூறினார்,

நிவாரண மையத்திற்கு சென்ற காணொளியை பகிர்ந்து கொண்ட திரு இஸ்மாயில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பான நிலையை உறுதி செய்வதற்காக பல மையங்களுக்குச் சென்றதாகக் கூறினார்.

சிலாங்கூரில் குறைந்தது 15,000 பேர் 100க்கும் மேற்பட்ட நிவாரண மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று திரு இஸ்மாயில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

நேற்று டிச.18 பெய்த மழை, ஒரு மாதத்தில் பெய்த மொத்த மழைக்கு சமம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாண்டாய் அருகே கொழுந்து விட்டெறிந்த பேருந்து (காணொளி) – தீக்கு இறையாய் போனது