இந்திய பயணிகளுக்கு குட் நியூஸ்… கட்டுப்பாடுகளை தளர்த்தியது இந்திய அரசு!

இந்தியாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இந்திய அரசு தளர்த்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் காரணமாக 2 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச விமான சேவை தடைபட்டு உள்ளது.

இனி எந்த கட்டுப்பாடுகளும் இல்லை…எல்லைகளைத் திறக்க தயாராகும் மலேசியா – சிங்கப்பூரில் எப்போது?

இந்திய அரசு ஒப்புதலின் அடிப்படையில், சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. சமீபத்தில் பரவிய ஒமிக்ரான் பாதிப்பால் இந்திய வரும் அனைத்து பயணிகளுக்கும் 7 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டது.

இந்தியாவில் தற்போது கிருமித்தொற்று பாதிப்புகள் குறைந்து வருவதால், வெளிநாட்டு பயணிகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன் பேரில், 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட சர்வதேச பயணிகளுக்கு 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் இனி இருக்காது.

அதேபோல RTPCR பரிசோதனையும் கட்டாயம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

“விண்வெளியிலும் சிங்கப்பூர் சாதனை” – உள்நாட்டு முதல் விண்வெளி கேமராவுடன் விண்ணில் செலுத்த தயாராகும் செயற்கைக்கோள்!