சிங்கப்பூரில் அமேசான் நிறுவனத்தின் புதிய பகுதி… வேலை வாய்ப்பு அதிகரிக்க வாய்ப்பு

Ore Huiying/Bloomberg

சிங்கப்பூரில் IOI Central Boulevard டவரில் சுமார் 369,000 சதுர அடி பரப்பளவை வாடகைக்கு எடுக்கும் ஒப்பந்தத்தில் அமேசான் நிறுவனம் கையெழுத்திட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் புதிய IOI Central Boulevard டவரில் முதல் இரண்டு மாடிகளையும் மற்றும் ஈஸ்ட் டவர் என்ற மற்றொரு கட்டிடத்தில் உள்ள ஒன்பது மாடிகளையும் குத்தகை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

“இங்கு பயணம் செய்ய வேண்டாம்”… எச்சரிக்கை செய்யும் சிங்கப்பூர்!

புதிய டவரின் கட்டுமானம் அடுத்த வருடத்தின் அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த IOI Central Boulevard டவர் மெரினா பே பகுதியில் டௌன்டவுன் பெருவிரைவு ரயில் நிலையத்திற்கு அருகாமையில் கட்டப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கார் முன்னே விசித்திரமாக நடந்துகொண்ட பெண்… நம்பர் பிளேட்டை உடைத்து எறிந்து அட்டகாசம்; வீடியோ வைரல்