சிங்கப்பூர் குடியுரிமைகொண்ட பெண்ணை, இந்திய குடியுரிமை உள்ள நபர், இந்தியாவில் திருமணம் செய்துகொள்ள முடியுமா?

marriage-of-convenience-related offences foreigners
(Photo: India filings)

சிங்கப்பூர் குடியுரிமைகொண்ட பெண்ணை இந்திய குடியுரிமை உள்ள நபர் இந்தியாவில் திருமணம் செய்துகொள்ள என்ன மாதிரியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? என ஒரு சந்தேகம் முன்வைக்கப்பட்டது.

இதற்கான சரியான தீர்வு என்னவென்றால், வழக்கம் போல் சமய நம்பிக்கை அடிப்படையில் திருமணம் செய்யலாம். பிறகு திருமணத்தை முறைப்படி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பிறகு திருமண சான்றிதழை அப்பாஸ்டில்(Apostille) அல்லது சாதாரண சான்றளிப்பு இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் செய்யப்பட வேண்டும்.

அப்பாஸ்டில் முறை: இதுவும் சான்றளிப்பு நடைமுறைதான். இதில் என்ன சிறப்பு என்றால் Hague convention படி கையொப்பமிட்ட நாடுகளுக்குள் செல்லுபடியாகும். இந்தியாவும் சிங்கப்பூரும் இதில் கையொப்பமிட்டுள்ளதால் இந்த அப்பாஸ்டில் முறை செல்லுபடியாகும்.

சாதாரண சான்றளிப்பு: Hague convention-இல் கையொப்பமிடாத நாடுகளுக்கு தனியே சான்றொப்பம் பெற வேண்டும். எ.கா. மலேசியா.

இன்னும் விரிவாக தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், இந்திய அரசின் இணைய தளம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சென்று முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

http://mea.gov.in/apostille.htm