மலேசியாவின் ‘DuitNow’ செயலியுடன் இணையவுள்ள சிங்கப்பூரின் ‘PayNow’ செயலி!

File Photo

உலகம் முழுவதும் ரொக்கமில்லா இணைய பணப் பரிவர்த்தனையை இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. இதற்கான மொபைல் ஆப்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் மூலம் வேலை வாய்ப்பும் பெருகி வருகிறது.

அந்த வகையில், சிங்கப்பூரின் ‘PayNow’ செயலி மற்றும் மலேசியாவின் ‘DuitNow’ செயலிகளுக்கு இடையே 2022- ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் புதிய இணைப்பு உருவாக்கப்படும். ‘PayNow’ மற்றும் ‘DuitNow’ இணைப்பின் மூலம் வாடிக்கையாளர்கள், கைத்தொலைபேசி எண் வழியாக உடனுக்குடன், எளிதாக, குறைந்த கட்டணத்தில் இரு நாடுகளுக்கும் இடையே இணையப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். குறிப்பாக, டீ கடை தொடங்கி மிகப்பெரிய ஷாப்பிங் மால் வரை ‘QR’ குறியீட்டைப் பயன்படுத்தி இணைய பணப் பரிவர்த்தனையை வாடிக்கையாளர்கள் எளிதாகவும், பாதுகாப்பாகவும் செய்ய முடியும்.

முதியவர்களுக்கு பழையனவற்றை நினைத்துப் பார்ப்பதில் ஆனந்தம்!

இந்த பணப் பரிவர்த்தனை செயலிகள் இணைப்பு குறித்து சிங்கப்பூர் நாணய ஆணையமும் (Monetary Authority of Singapore- ‘MAS’), மலேசிய மத்திய வங்கியும் (Bank Negara Malaysia- ‘BNM’) இன்று (27/09/2021) கூட்டாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். மேலும், “PayNow’- ‘DuitNow’ இணைப்பு சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையேயான நெருங்கிய உறவுகளின் வரலாற்றில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இரு நாடுகளுக்கிடையில் கடந்த ஆண்டு சுமார் 1.3 பில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்பில் பணப் பரிவர்த்தனைகள் இடம் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயலிகள் இணைப்பு மூலம் இரு நாடுகளுக்கிடையேயான பயணிகளையும் ஈர்க்கும்.

“போதுமான அளவு காய்கறிகள், பழங்கள் கையிருப்பில் உள்ளது”- பேரங்காடிகள் விளக்கம்!

ஏற்கனவே, ‘PayNow’ செயலி மற்றும் இந்தியாவின் ‘UPI’ செயலி இணைக்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.