படையெடுப்பிற்கான கொள்கைகள் பைத்தியக்காரத்தனமானது – போர் குறித்து சிங்கப்பூர் பிரதமர் கருத்து

pm lee said conflict us china relations strained due to russia ukraine war asia pacific

உக்ரைன்-ரஷ்யா இடையேயான மோதல் ஆசிய- பசிபிக் பகுதியில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வெளியுறவு கவுன்சில் (CFR) சிங்கப்பூர் பிரதமர் லீ-யிடம் கேள்வி எழுப்பியது. இரண்டு நாடுகளுக்கு இடையேயான போர் ,அமெரிக்கா – சீனா இடையேயான உறவை சீர்குலைத்து விட்டதாக பேச்சைத் தொடங்கிய பிரதமர் தொடர்ந்து போரின் தாக்கத்தை விளக்கத் தொடங்கினார்.

புவியியல் ரீதியாக ஆசிய-பசிபிக் ,ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து வெகு தொலைவில் இருந்தாலும் ,ரஷ்யாவின் படையெடுப்பு பிராந்தியத்தில் பல்வேறு நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். ரஷ்யாவின் படையெடுப்பு ஏற்கனவே மூன்று நிலைகளில் பிராந்தியத்தை பாதித்துள்ளதாக CFR உடனான உரையாடலின்போது தெரிவித்தார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலினால் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் :

  • நாடுகளுக்கிடையே சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதியை சீர்குலைத்தது.
  • அனைத்து நாடுகளின் குறிப்பாக சிறிய நாடுகளின் சுதந்திரம் ,ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை சேதப்படுத்தியது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறியுள்ளது.

வரலாற்றுப் பிழைகளும் ,முட்டாள்தனமான முடிவுகளும் பிற நாட்டின் மீது படையெடுப்பதற்கான நியாயம் என்ற கொள்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ,ஆசிய பசிபிக் பகுதியில் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் பாதுகாப்பற்றவர்களாக உணருவார்கள் என்று நினைப்பதாக பிரதமர் கூறினார்.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட உக்ரைனின் சூழ்நிலையில் இருந்து கற்றுக் கொண்ட பிரதமர், ஆசிய பசிபிக் தலைவர்கள் “மோதலுக்கான பாதை மற்றும் அவற்றை எவ்வாறு தவிர்க்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும் ” என்றார்.