தனியார் வாகனமோட்டும் பயிற்றுவிப்பாளர்கள் சில ஆண்டுகளில் இல்லாமல் போக வாய்ப்பு!

Photo: Land Transport Authority Official Facebook Page

பொதுவாக ஒருவர் காரை உள்ளிட்ட வாகனங்களை ஓட்ட பழகுவதற்கு வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிக்கு செல்வது வழக்கம். அங்கு அவர்கள் வாகனத்தை இயக்குவது எப்படி?, சாலை போக்குவரத்து விதிமுறைகள் என்ன? எந்த வேகத்தில் செல்ல வேண்டும் போன்றவையைக் கற்றுக் கொடுப்பார்கள். அதே சமயம், சிலர் தனியார் பயிற்றுவிப்பாளர்களிடம் சென்று பயிற்சி பெறுவதும் உண்டு.

அந்த வகையில், சிங்கப்பூரில் பெரும்பாலான தனியார் ஓட்டுநர் பயிற்றுவிப்பாளர்கள் 75 வயதைக் கடந்தவர்கள் அல்லது அந்த வயதைத் தொடவிருப்பர்வர்கள் ஆவர். இதில் பெரும்பாலானோர் 40 ஆண்டுகளுக்கும் மேல் பயிற்றுநர் தொழில் ஈடுபட்டு வருபவர்கள். தற்போது தனியார் வாகனம் ஓட்டும் பயிற்றுவிப்பாளர்களாக இருப்போர் சராசரியாக 65- லிருந்து 70 வயதுக்குட்பட்டவர்கள் என்று சிங்கப்பூர் வாகனமோட்டும் பயிற்றுவிப்பாளர் சங்கம் கூறியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இடம் பிடித்த முதல் சிங்கப்பூர் வீரர்!

சிங்கப்பூர் போக்குவரத்து சட்டப்படி, 75 வயதைக் கடந்தவர்கள் வாகன பயிற்றுவிப்பாளர்களாகப் பணிபுரிய முடியாது. தற்போது, 375 தனியார் பயிற்றுவிப்பாளர்கள் இருக்கின்றன. இவர்கள் 59 வயதுக்கும் 74 வயதுக்கும் உட்பட்டவர்கள் ஆவர். கடந்த 1987- ஆம் ஆண்டு தனியார் வாகனமோட்டும் பயிற்றுவிப்பாளர்களுக்கு உரிமங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக, சுமார் 15 ஆண்டுகளில் தனியார் வாகனமோட்டும் பயிற்றுவிப்பாளர்கள் அறவே இருக்க மாட்டார்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இதனால், வருங்காலத்தில் அனைவரும் வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு சென்றுதான் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “வாகனமோட்டும் பயிற்சிப் பள்ளிகளுக்கு சென்று வாகனம் ஓட்ட கற்றுக் கொள்வதுதான் சாலை பாதுகாப்பை மேலும் உறுதிச் செய்யவும், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள உதவும்” என்று கூறினார்.

கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு!

அரசு தனியார் வாகனமோட்டும் பயிற்றுவிப்பாளர்களுக்கு உரிமம் வழங்குவதைத் தொடங்கும் பட்சத்தில், புதிய தலைமுறையினருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.