ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இடம் பிடித்த முதல் சிங்கப்பூர் வீரர்!

File Photo

 

இந்தியாவில் ஆண்டுதோறும் இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ஹைதராபாத் சன் ரைசர்ஸ், மும்பை இண்டியன்ஸ், பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய எட்டு அணிகள் விளையாடுகின்றன. இந்த ஐபிஎல் போட்டிகள் உலக புகழ் பெற்றது.

நடப்பாண்டில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சீசன் 14 (IPL Season- 14), கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டனர். மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகமும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (BCCI) அறிவித்திருந்தது. இதற்கான போட்டி அட்டவணையும் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு!

அதன்படி, ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ள எட்டு அணிகளின் வீரர்கள் விமானங்கள் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளனர். ஐபிஎல் தொடரில் இதுவரை 29 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் மீதமுள்ள 31 போட்டிகள் அங்கு நடைபெற உள்ளது.

மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்பட உள்ளது. செப்டம்பர் 19- ஆம் தேதி அன்று மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரில் முதாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோத உள்ளது.

இந்த நிலையில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவருமே நேற்று முன்தினம் (20/08/2021) தங்களது முதல்கட்ட பயிற்சியில் ஈடுபட்டனர். துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் இந்த பயிற்சி முகாம் தொடங்கியது.

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிங்கப்பூரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் டிம் டேவிட் (Tim David) பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். 25 வயது டிம் டேவிட் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள முதல் சிங்கப்பூர் கிரிக்கெட் வீரர் என்றப் பெருமையைப் பெறுகிறார்.

வாட்ச்மேன் மகள் முதல் சிங்கப்பூர் மகள் வரை.. முதல் பெண் அதிபர் ஹலிமா யாகூப் கடந்து வந்த பாதை!

அதிரடி ஆட்டத்திற்குப் பெயர் போன டிம் டேவிட், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் என உலகின் பல டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியுள்ளார். சிங்கப்பூருக்காக இதுவரை அவர் 14 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிங்கப்பூரைச் சேர்ந்த கிரிக்கெட் ஒருவர் முதன்முறையாக பங்கேற்கவிருப்பதால், கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.