ரியல் எஸ்டேட் முதலீட்டுக்கான சிறந்த இடம் சிங்கப்பூர்!

Photo: Housing and Development Board

சிங்கப்பூரின் ரியல் எஸ்டேட் முதலீட்டு வளர்ச்சி (Real Estate Investment Growth),2021- ஆம் ஆண்டின் முதல் பாதியில் 4.7 பில்லியன் அமெரிக்க டாலராக (RM20 பில்லியன்) இரட்டிப்பாகியது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 97% அதிகரித்துள்ளது.

ரியல் கேப்பிடல் அனலிடிக்ஸ் (Real Capital Analytics- ‘RCA’) நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிய- பசிபிக் மூலதன போக்குகள் நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் (Asia Pacific Capital Trends 2Q2021) மொத்த முதலீட்டில் பாதிக்கு மேல் சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து வந்ததாகக் கூறியுள்ளது. நடப்பாண்டில் முதலீட்டு நடவடிக்கைகள் சிங்கப்பூரின் மூன்றாவது பெரிய அளவு. அதேநேரம் வெளிநாட்டினரின் ரியல் எஸ்டேட் முதலீட்டு வளர்ச்சிக்கு ஏற்ற நாடுகளின் சிறந்த பட்டியலில் சிங்கப்பூர் முதன் முறையாக முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது.

தீமிதித் திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு!

நடப்பாண்டின் முதல் காலாண்டில் (1H2021) சிங்கப்பூரின் வலுவான ரியல் எஸ்டேட் முதலீட்டு சந்தை (Real Estate Investment Market) செயல்திறன் ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் (Asia-Pacific Region) தொடர்ச்சியான மீட்புக்கு ஏற்ப உள்ளது. இந்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய சந்தைகளிலும் நிலையான விற்பனை வளர்ச்சியைக் கண்டதாக அறிக்கை கூறுகிறது.

அறிக்கையின் படி, ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் முதலீட்டு நடவடிக்கைகள், நடப்பாண்டின் முதல் காலாண்டில் (1H2021) 77.6 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த 2020- ஆம் ஆண்டின் இதே காலத்திலிருந்து 8% அதிகரித்துள்ளது.