தீமிதித் திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு!

Sri Mariyamman temple Firewalking Ceremony

சௌத் பிரிட்ஜ் (South Bridge) சாலையில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தீமிதித் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் அக்டோபர் 24- ஆம் தேதி அன்று இக்கோயிலில் தீமிதித் திருவிழா நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது. மேலும், வரும் ஆகஸ்ட் 16- ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தீமிதித் திருவிழா தொடங்குகிறது.

இந்த தீமிதித் திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனை விரிவாகப் பார்ப்போம்!

அதன்படி, முழுமையாக கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பக்தர்களும், கொரோனா மருத்துவ பரிசோதனையில் நோய்த்தொற்று இல்லை என்று சான்றிதழுடன் வரும் பக்தர்களும் மட்டுமே தீமிதித் திருவிழாவில் விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். ஒரே நேரத்தில் 50 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் 69 வயது முதியவர் உயிரிழப்பு!

தீமிதியில் பங்கேற்க, எத்தனை பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்ற விவரம் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழாவில் பங்கேற்க கோயில் இணைய தளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

தீமிதி திருவிழா முழுவதும், ஸ்ரீ மாரியம்மன் கோயிலிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மட்டுமே இடம்பெறும்.

ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலிருந்து ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் மேற்கொள்ளப்படும் வழக்கமான பாத ஊர்வலம் நடைபெறாது.

தீமிதியை பக்தர்கள் வீட்டிலிருந்தே காணும் வகையில் கோயில் இணையதள பக்கம் மற்றும் யூடியூப் சேனல் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

கட்டுமான ஊழியர்களுக்கு கட்டாயமாகும் “ART” சோதனை.!..

தீமிதிக்கு முன்பும், பின்பும் நடைபெறும் பால்குடம், அங்க பிரதட்சணம் போன்ற சடங்குகள் நடைபெறும்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் கூறியுள்ளது.