கட்டுமான ஊழியர்களுக்கு கட்டாயமாகும் “ART” சோதனை.!..

workplace injury compensation-limits update mom
(Photo by Roslan RAHMAN / AFP)

“ART” எனும் ஆண்டிஜன் துரிதப் பரிசோதனை, சிங்கப்பூரின் கட்டுமானத் துறையில் கட்டாயமாக்கப்படுவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

கட்டிட கட்டுமான ஆணையம், வழக்கமாக “RRT” பரிசோதனை செய்து கொள்ளும் ஊழியர்களும், தங்குமிடங்களில் உள்ள ஊழியர்களும் இனி “ART” பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டுமென சுற்றறிக்கையில் அறிமுகப்படுத்தப்படும் என்றது.

கோவிட்-19 நோய் தொற்று பரவலாக இருந்து வருவதால், அப்பரவலைத் தடுக்கவும், மக்கள் பாதுகாப்புடன் இருக்கவும் கட்டாய “ART” எனும் ஆண்டிஜன் துரிதப் பரிசோதனை அவசியம் என்று அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.