கொரோனா பாதிப்பால் 69 வயது முதியவர் உயிரிழப்பு!

Photo: Wikipedia

 

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, கொரோனா தடுப்பூசியை இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தடுப்பூசி நிலையங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டு வருகின்றன. தடுப்பூசியைச் செலுத்துவதில் முதியவர்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது சுகாதாரத்துறை அமைச்சகம். அதன்படி, முதியவர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள முன்பதிவு தேவையில்லை. வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாத முதியவர்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கே சென்று தடுப்பூசிப் போடப்பட்டு வருகிறது. இதற்காக மருத்துவர், செவிலியர் அடங்கிய மருத்துவக் குழுவினர் அமைக்கப்பட்டுள்ளன.

சுகாதாரத்துறை மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலனைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அமலுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராகும் சிங்கப்பூர்! மாறும் பருவநிலையே காரணம்

எனினும், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களை சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாத பொதுமக்கள், கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சிங்கப்பூரில் உள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் 70%- க்கும் அதிகமானோர் முழுமையாகக் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனர். இருப்பினும், ஒருசிலர் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வரும் நிலையில், தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு பிரதமர், துணை பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.

தேசிய தின கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளிநாட்டு ஊழியர்கள்!

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 28- ஆம் தேதி அன்று 69 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜூலை 29- ஆம் தேதி அன்று அந்த முதியவர் டான் டொக் செங் (Tan Tock Seng) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், நோய்த்தொற்று உறுதியானது. மேலும், கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட அவர் போட்டுக் கொள்ளவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று (11/08/2021) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்தது. குறிப்பாக, இந்த மாதத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆனது.

சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகையில், கொரோனாவால் உயிரிழந்த 69 வயது முதியவருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிகப்படியான கொழுப்பு ஆகியவை இருந்தன. மேலும் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளது.