சிங்கப்பூரில் பூச்சி, வெட்டுக்கிளி, புழு, தேனீ ஆகியவற்றை உண்ணத் தயாரா? – விரைவில் உணவாக வரப்போகும் பூச்சிகள்

sfa-insects-human-consumption
Getty Images

சிங்கப்பூரர்கள் விரைவில் முழுப் பூச்சிகளையும் மற்றும் பூச்சி உணவுப் பொருட்களையும் உணவாக உள்நாட்டிலேயே சாப்பிட அனுமதி கிடைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) சமீபத்தில் தான் இந்த பூச்சிகள் மற்றும் பூச்சி உணவு பொருட்களுக்கான ஒழுங்குமுறை நிலை குறித்து மதிப்பாய்வு செய்து முடித்தது.

லாரி மற்றும் கார் மோதி பயங்கர விபத்து: ஒருவர் மரணம்

தற்போது மனித நுகர்வுக்கு பூச்சிகளை இறக்குமதி செய்வதையும் விற்பனை செய்வதையும் சிங்கப்பூர் தடை செய்துள்ளது. ஆனால், இந்த மதிப்பாய்வு முடிந்ததை அடுத்து அதனை சாப்பிட அனுமதி வரலாம் என்று SFA கூறியது.

மனித நுகர்வு, கால்நடை தீவனத்திற்கு மற்றும் பூச்சி தயாரிப்புகளை இறக்குமதி செய்து அதனை விற்பனை செய்ய SFA அனுமதி வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SFA ஆல் மனித நுகர்வுக்காக அங்கீகரிக்கப்பட்ட 16 பூச்சி இனங்களின் பட்டியலில் ஹவுஸ் கிரிக்கெட் பூச்சி, வெட்டுக்கிளி, உணவு புழு (mealworm), பட்டுப்புழு (silkworm) மற்றும் ஐரோப்பிய தேனீ ஆகியவை அடங்கும்.

Zam Zam உணவகத்தின் முன்னாள் இயக்குனர் மிரட்டல் உள்ளிட்ட இரு குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிப்பு