ஆசியாவின் மிகப்பெரிய “சிங்கப்பூர் ஏர்ஷோ”….குறைவான நாடுகள் பங்கேற்பு – இந்திய போர் விமானம் “தேஜஸ்” இடம்பெறுமா?

Singapore Airshow: சிங்கப்பூர் ஏர்ஷோ இந்த ஆண்டு கோவிட்-19 தொற்றுநோய் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட சிறிய அளவிலான பங்கேற்புடன் நடைபெறும் என கூறப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, பிப்ரவரி 15 முதல் 18 வரை சாங்கி கண்காட்சி மையத்தில் இந்த சிங்கப்பூர் ஏர்ஷோ விமான கண்காட்சி நடைபெறும்.

சிங்கப்பூரில் தீவு முழுவதும் பொது எச்சரிக்கை ஒலி – பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்

விமான மற்றும் தற்காப்பு கண்காட்சியில் 39 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து 13,000க்கும் மேற்பட்ட வர்த்தக வருகையாளர்கள் மற்றும் சுமார் 600 நிறுவனங்கள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஏர்ஷோவை விட இது குறைவு, அதாவது அப்போது 110 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து 30,000 வர்த்தக வருகையாளர்கள் கலந்துகொண்டனர்.

வர்த்தக வருகையாளர்கள், இராணுவ மற்றும் அரசாங்க அதிகாரிகளை ஈர்க்கும் இந்த நிகழ்வு, ஆசியாவிலேயே மிகப்பெரியதாக நடைபெறும்.

ஆனால், இந்த ஆண்டு விமான கண்காட்சியில் பொதுமக்கள் கலந்து கொள்ள முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முக்கிய பங்கேற்பாளர்கள்:

  • ஏர்பஸ் (Airbus)
  • ஏவியேஷன் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷன் ஆஃப் சீனா
  • போயிங் (Boeing)
  • இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்
  • லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin)
  • ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ்
  • ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce)
  • தேலஸ் (Thales)
  • துருக்கிய ஏரோஸ்பேஸ்
  • உள்நாட்டு ST இன்ஜினியரிங்

மேலும், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக MK-I தேஜஸ் (Tejas) போர் விமானத்தை இந்திய விமானப்படை காட்சிப் படுத்தவுள்ளது.

வெற்றிகரமாக சிங்கப்பூர் வந்தடைந்த Paxlovid மாத்திரையின் முதல் தொகுதி – யார் யாருக்கு?