சிங்கப்பூருக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே விமான சேவை எப்போது தொடங்கும்?- அறிவிப்பை வெளியிட்டது ‘Jetstar Asia’!

 

சிங்கப்பூரில் ஒருபுறம் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. மற்றொரு புறம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், முன்னணி ஆட்டோமொபைல் தொழில் நிறுவனங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதேபோல், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், உள்நாட்டு விமான நிறுவனங்கள் பொருளாதார ரீதியிலாக மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்களின் விகிதம் 80%-ஐ தாண்டியதால், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புரூணை, ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகளுக்கு பயணிகளின் விமான சேவைக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. அதன்படி, இந்த நாடுகளுடனான விமான போக்குவரத்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரின் கோவிட்-19 புதிய கட்டுபாடுகள், தவிர்க்கக்கூடிய மரணங்ளிலிருந்து மக்களை பாதுகாக்கும்!

இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து நாடுகளுடனான சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கும் என்று ஆஸ்திரேலியா அரசு தெரிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயணிகள் விமான சேவை தொடங்கவிருப்பதாக ‘Jetstar Asia’ நிறுவனம் அறிவித்துள்ளது.

‘Jetstar Asia’ வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூருக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே விமான சேவை தொடங்குவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிங்கப்பூருக்கும், ஆஸ்திரேலியாவின் டார்வின் நகருக்கும் இடையே பயணிகள் விமான சேவை தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் 20- ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்கும், டார்வினுக்கும் (Darwin) இடையே வாரம் மூன்று முறை விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் அது இரண்டு அரசுகளின் முடிவுகளைப் பொருத்தது” என்று குறிப்பிட்டுள்ளது.

சாங்கி விமான நிலையம், மீண்டும் செழிப்பாக வேண்டும்!

இது குறித்து ‘Jetstar Asia’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பாரா பசுபதி (Jetstar Asia CEO, Bara Pasupathi) கூறுகையில், “இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு இரு நாடுகளிடையே மீண்டும் விமான சேவை தொடங்குவது உற்சாகம் அளிக்கிறது. சிங்கப்பூரில், ஆஸ்திரேலியாவிலும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டதால், இன்னும் ஒரு சில மாதங்களில் கொரோனா தடுப்பூசியை முழுமையாக அனைவரும் செலுத்திக் கொள்ளவர் என்று கணிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

அதேபோல், ‘Qantas’ குழுமமும் மெல்போர்ன் மற்றும் சிங்கப்பூர் இடையே விமான சேவையை வரும் டிசம்பர் மாதம் 19- ஆம் தேதி தொடங்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

மதுரை-துபாய் இடையே அக். முதல் விமான சேவை – சிங்கப்பூருக்கு எப்போது சேவை பயணிகள் எதிர்பார்ப்பு

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பான பயணத் திட்டம் நிலுவையில் உள்ள சூழலில் விமான நிறுவனங்கள் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.