வாடகை கப்பலிலிருந்து வடகொரிய கப்பலுக்கு கடலில் பரிமாற்றம் செய்யப்பட்ட எரிவாயு – சிங்கப்பூர் நிறுவனம் ஐநாவின் தடையை மீறியதா? வட கொரியாவிற்கு உதவியதா?

Cargo ship fire incident
Pic: AFP

சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்தின் இயக்குனர் தனது நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட கப்பலிலிருந்து வடகொரிய கப்பலுக்கு எரிவாயு மற்றும் எண்ணெய் சரக்குகளை கடலில் பரிமாற்றம் செய்ததாக ஊடக அறிக்கைகளில் வெளியானது. இதனை அடுத்து நிறுவனத்தின் இயக்குனர் ஆதாரங்களை மறைப்பதற்காக அவரது iMac கணினி மற்றும் தொலைபேசியை கடலில் தூக்கி எறிந்தார்.

நிறுவனத்தின் இயக்குனர் Manfred Low Cheng ஆதாரங்களை மறைத்து நீதியை தடுத்த குற்றத்திற்காக செவ்வாய்க்கிழமையன்று (June 7) 15 வாரங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது சிறைத்தண்டனைக்கு மற்றொரு குற்றச்சாட்டும் காரணமாக கருதப்பட்டது.என்னை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் சிங்கப்பூர் நிறுவனமான (YTE) Yuk Tung Energy-ன் இயக்குனராக லோ இருந்தார்.

ஐநாவின் விதிமுறைகளின்படி வடகொரிய கொடியிடப்பட்ட கப்பல்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை கடலில் கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு மாற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடலில் லோவின் கப்பலுக்கும் வடகொரிய கப்பலுக்கும் இடையே சட்டவிரோதமாக பெட்ரோலிய பொருட்கள் பரிமாற்றம் செய்யப்பட்டதாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் வெளியிட்டது.

வடகொரிய அதிக எண்ணிக்கையிலான ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதால் அதனை கட்டுப்படுத்த ஐநா சபை இந்த தடையை விதித்துள்ளதாக வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த குற்றமானது சிங்கப்பூரை சர்வதேச விமர்சனத்திற்கு உள்ளாக்கியதாக சிங்கப்பூர் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும் சிங்கப்பூர் நிறுவனங்கள் உலக சந்தையில் எவ்வாறு பேசப்படுகின்றன என்பதையும் இது பாதிக்கிறது.

கடத்தல் தொடர்பான ஆதாரங்களை மறைத்ததற்காக YTE நிறுவனத்தின் பங்குதாரரான லோவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.