சிங்கப்பூரில் GST இனி 8 சதவீதம் – ஜன.1 முதல் அமல்: S$400 இருந்தால் வரி

Singapore GST 8
Singapore GST 8

Singapore GST: சிங்கப்பூரில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) விகிதம் எட்டு சதவீதமாக உயர்ந்துள்ளது.

7 % இருந்த GST 8 % ஆக அதிகரித்து ஜன. 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷெங் சியோங் அனைத்து கடைகளிலும் தள்ளுபடி விற்பனை – மார்ச் 31 வரை சலுகை

அதோடு மட்டுமல்லாமல், அடுத்த 2024 ஆம் ஆண்டு ஜன. 1 முதல் GST எட்டிலிருந்து ஒன்பது சதவீதமாக மற்றொரு உயர்வை பெறும்.

கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 18, அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையின் ஒரு பகுதியாக இந்த ஜிஎஸ்டி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பை நிதி அமைச்சரும் துணைப் பிரதமருமான லாரன்ஸ் வோங் அப்போது வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி சிங்கப்பூரில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் (S$400 வரை மதிப்புள்ள பொருட்கள் உட்பட) புதிய GST விகிதம் பொருந்தும்.

புத்தாண்டு தினத்தன்று சிராங்கூன் பகுதியில் இறந்து கிடந்த 28 வயது ஆடவர்; யார் அவர்?