தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் MRT ரயில் பாதையில் திறக்கப்படவுள்ள 11 புதிய நிலையங்கள் – சிறப்புகள் என்ன?

thomson-east-coast-line-stage-3-open-free-rides
LTA

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் லேனில் (TEL) மொத்தம் 11 புதிய MRT ரயில் நிலையங்கள் வரும் நவம்பர் 13, 2022 அன்று பயணிகள் சேவைக்காக திறக்கப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

11 புதிய MRT ரயில் நிலையங்கள்

  • ஸ்டீவன்ஸ்
  • நேப்பியர்
  • ஆர்ச்சர்ட் பொலிவார்ட்
  • ஆர்ச்சர்ட்
  • கிரேட் வேர்ல்ட்
  • ஹேவ்லாக்
  • அவுட்ராம் பார்க்
  • மேக்ஸ்வெல்
  • ஷென்டன் வே
  • மெரினா பே
  • கார்டன்ஸ் பை தி பே

மேற்கண்ட புதிய பாதைகள் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் லேன் பயணிகளை தற்போதுள்ள அனைத்து MRT லேன்களிலும் இணைக்கும்.

இவற்றில் நான்கு ரயில் நிலையங்கள் interchange stations என்னும் பரிமாற்ற நிலையங்கள் என்பது கூடுதல் தகவல்.

கட்டுமான ஊழியரை அடித்து தாக்கிய சக ஊழியர் – இதல்லாம் ஒரு காரணமா ?

இணைப்பு நிலையங்கள்

ஸ்டீவன்ஸ் நிலையம் டவுன்டவுன் லேனுடன் இணைக்கப்படும்.

ஆர்ச்சர்ட் நிலையம் வடக்கு-தெற்கு பாதையுடன் இணைக்கப்படும்.

அவுட்ராம் பார்க் மற்றும் மெரினா பே நிலையங்கள் ஆகிய இரண்டும் மூன்று-லேன் பரிமாற்ற நிலையங்கள் ஆகும்.

அவுட்ராம் பார்க் கிழக்கு-மேற்கு பாதை மற்றும் வடக்கு-கிழக்கு பாதையுடன் இணைகிறது.

மெரினா பே வடக்கு-தெற்கு பாதை மற்றும் வட்டப் பாதையுடன் இணைகிறது.

லாரியின் இடையில் சிக்கி விபத்துக்குள்ளான கார் – ஒருவர் மருத்துவமனையில் அனுமதி