கட்டுமான ஊழியரை அடித்து தாக்கிய சக ஊழியர் – இதல்லாம் ஒரு காரணமா ?

Work permit foreign workers Construction company
Pic: Today/File

சக ஊழியர் தனது பாதுகாப்புக் கவசத்தை எடுத்துச் சென்றதால் கோபமடைந்த கட்டுமான ஊழியர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 43 வயதான கட்டுமான ஊழியருக்கு கடந்த வியாழக்கிழமை (அக். 6) ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கட்டுமான ஊழியர் தானாக முன்வந்து இன்னொரு ஊழியருக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார், இரண்டாவது குற்றச்சாட்டு கருத்தில் எடுத்து கொள்ளப்பட்டது.

கட்டுமான ஊழியர் மற்றும் 33 வயதான பாதிக்கப்பட்ட சக ஊழியர் ஆகியோர் சோவா சூ காங்கில் உள்ள தேவாலயத்தின் அதே கட்டுமான தளத்தில் பணிபுரிந்ததாக கூறப்பட்டுள்ளது.

லாரியின் இடையில் சிக்கி விபத்துக்குள்ளான கார் – ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

கடந்த ஜூன் 3 ஆம் தேதி மதியம் 1 மணியளவில், பாதிக்கப்பட்ட ஊழியர் யாரும் பயன்படுத்தாமல் கிடந்த கட்டுமான ஊழியரின் பாதுகாப்புக் கவசத்தை கண்டார். பின்னர் அதை எடுத்து அணிந்து அவர் தொடர்ந்து வேலை செய்தார்.

இதனை கண்ட அந்த கட்டுமான ஊழியர், அந்த பாதுகாப்பு கவசம் தன்னுடையது என்றும் திரும்ப வேண்டும் என்றும் கட்டுமான ஊழியர் சக ஊழியரிடம் கூறினார்.

ஆனால் சக ஊழியர் அவரை காத்திருக்கச் சொன்னார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கவசத்தை பிடித்து இழுத்தார் கட்டுமான ஊழியர், இதனால் பாதிக்கப்பட்ட சக ஊழியர் தனது கால் தடுமாறி சாரக்கட்டில் இருந்து கீழே விழுந்தார்.

கீழே விழுந்த அவரை நெஞ்சி பகுதியிலும் அவர் உதைந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

வேலையின்போது உயிரிழந்த இந்திய ஊழியர் – அஜாக்கிரதையாக செயல்பட்ட நிறுவனத்துக்கு S$250,000 அபராதம்