லாட்டரியில் “20 கோடி ரூபாய்” வென்ற தமிழக இளைஞர் : கோடீஸ்வரனாகியும் படித்த அரசு பள்ளியை ஆச்சர்யத்தில் உறைய வைத்த செயல்!

கட்டுமான வேலை செய்து வந்த தமிழர் ஒருவர் லாட்டரி மூலம் 20 கோடி ரூபாய் வென்று கோடீஸ்வரரானார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) வசிக்கும் 25 வயதான தமிழக விவசாயி, அங்கு கட்டுமான நிறுவனம் ஒன்றில் கொத்தனாராக வேலை செய்து வந்தார். அவர் 57வது வாராந்திர நேரடி மஹ்ஜூஜ் டிராவில் 10 மில்லியன் திர்ஹாம்கள் பரிசை வென்றுள்ளார்.

இந்த தொகை இந்திய மதிப்பில் ரூ.20,23,90,155 ஆகும். டிராவில் வெற்றி பெற்றவர், ஃபுஜைரா நகரில் கொத்தனாராக பணிபுரியும் தினகர் என்பதும், ஐந்து வெற்றி எண்களை (1, 33, 40, 45, 46) பெற்றுள்ளார் என்று Gulf News தெரிவிக்கிறது. தினகரனின் அதிர்ஷ்டம் நொடியில் மாறியது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பக் கடனைக் குறைக்க நண்பர்களிடம் கடன் வாங்கிய பணத்துடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ளார் தினகரன். அவர் தனது அறை தோழர்கள் பல மாதங்களாக லாட்டரியில் பங்கேற்பதைப் பார்த்தார். அவரைப் பார்த்த தினகரனும் முதல் முறையாக ஆன்லைனில் லாட்டரி வாங்கியுள்ளார். அது அதிர்ஷ்டமாக மாறிவிட்டது.
எனது தாத்தா, பாட்டியின் ஆசிர்வாதமே, இந்த பணத்தை எனது குடும்பத்தை காப்பாற்ற உயிர்நாடியாக கொடுத்துள்ளதாக கூறுகிறார் தினகர்.

அவர் வென்ற பணத்தில் ஒரு பகுதியை தங்கள் கிராமத்தில் உள்ள பள்ளியில் வசதிகளை மேம்படுத்த பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். 57வது மஹ்சூஸ் கிராண்ட் டிராவில், ஆறு வெற்றியாளர்கள் இரண்டாம் நிலை பரிசை வென்றுள்ளனர். இவை அனைத்தையும் சேர்த்து 10 லட்சம் திர்ஹம் (ரூ.2,02,43,780) வழங்கப்படும். இதன் மூலம் ஒரு பங்கில் 166,666 திர்ஹம்கள் (ரூ. 33,72,225) வரும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போலவே சிங்கப்பூரிலும் லோட்டோ லாட்டரி விற்பனையாகிறது. ஆனால் தமிழர்கள் வெற்றி பெரும் சதவிகிதம் வெகு சொற்பமாகவே உள்ளது.