“இனிமே கட்டுப்பாடு கிடையாது… தாராளமா வரலாம்” – அறிவிப்பை வெளியிட்டு அசத்திய நாடு

விசா வைத்திருக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து பயணிகளுக்கும் ஆஸ்திரேலியா அந்நாட்டு எல்லைகளை முழுமையாக மீண்டும் திறக்க உள்ளதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் திங்கள்கிழமை (பிப்ரவரி 7) தெரிவித்தார்.

இந்த புதிய நடைமுறை வரும் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

திருச்சி-சிங்கப்பூர் விமான வழித்தடம் எப்போதுமே மாஸ்… சிங்கப்பூர் சேவையில் சாதனை படைத்த “திருச்சி” – இந்தியாவிலேயே டாப்!

கொரோனா வைரஸின் அச்சுறுத்தலைத் கட்டுப்படுத்தும் நோக்கில் குடிமக்கள் அல்லாதவர்களுக்கு ஆஸ்திரேலியா தனது எல்லைகளை மூடி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இரு தடுப்பூசி போட்டிருந்தால், உங்களை மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கு வரவேற்க எதிர்நோக்கியுள்ளதாக மோரிசன் ஊடக சந்திப்பின் போது கூறினார்.

தொற்றுநோய்க்கு எதிராக நாட்டை பாதுகாக்க ஆஸ்திரேலியா அதன் எல்லைகள் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூடியது குறிப்பிடத்தக்கது.

கேம் மோகத்தால் ரூ.36 லட்சத்தை இழந்த இந்தியர்… சிங்கப்பூர் கேமிங் போர்ட்டலில் பதிவிறக்கம் செய்து பணத்தை இழந்த சோகம்!