சுமார் 116 கிராம் தங்கத்தை வாயில் வைத்து கொண்டு வந்த ஊழியர் – பீப் சத்தம் மூலம் சிக்கினார்!

ANI

“தங்கம் கடத்தல் vs விமான நிலையங்கள்” எப்போதுமே பிரிக்க முடியாத ஒன்றாக தான் தற்போது பார்க்க முடிகிறது. வடிவேலு சொல்வதை போல “உக்காந்து யோசிப்பாய்ங்களோ”! என்பது போல அமைந்து வருகிறது தொடர் தங்கம் கடத்தல் சம்பவங்கள்.

அதிகாரிகள் என்னதான் முழு வீச்சாக செயல்பட்டாலும், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு தான் வருகிறது. இந்த முறை, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தை பற்றி பார்ப்போம்.

இந்திய பயணிகளுக்கு குட் நியூஸ்… கட்டுப்பாடுகளை தளர்த்தியது இந்திய அரசு!

இன்று துபாயிலிருந்து அங்கு வந்த பயணி ஒருவர் பரிசோதனை இயந்திரத்தைக் கடந்து சென்றபோது, பீப்..பீப்..பீப்.. என சப்தம் எழுந்தது. பின்னர் அவரிடம் சோதனை செய்ததில் ஆச்சரியம் என்னவென்றால் அவரிடம் எதுவும் கிடைக்கவில்லை.

சந்தேக தீ அணையாத பச்சத்தில், அதிகாரிகள் அவரை மீண்டும் பரிசோதித்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த பயணி தனது நாக்கின் அடியில் சுமார் 116.590 கிராம் எடையுள்ள தங்கத்தை இரண்டு பொத்தான்கள் போல செய்து மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.5.79 லட்சம் என்பதும் தெரியவந்துள்ளது.

இவர் துபையில் வேலை செய்து வரும் ஊழியர், வரிசெலுத்தாமல் தப்பிக்க தங்கத்தை இப்படி மறைத்து கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

அதன் பின்னர் அவர் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இனி எந்த கட்டுப்பாடுகளும் இல்லை…எல்லைகளைத் திறக்க தயாராகும் மலேசியா – சிங்கப்பூரில் எப்போது?