சிங்கப்பூரில் செலவுகள் அதிகரிக்குமா? உலகின் மிக விலையுயர்ந்த நகரங்கள் 2021 பட்டியலில் சிங்கப்பூர்!

AP/Rishi Lekhi

எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் அறிக்கையின்படி, இஸ்ரேலின் டெல் அவிவ், இப்போது வாழ்வதற்கு உலகின் மிக விலையுயர்ந்த நகரமாக உள்ளது.

இஸ்ரேலிய நகரம் டெல் அவிவ் டிசம்பர் 2021 உலகளாவிய வாழ்க்கைச் செலவுக் குறியீட்டில் முதன்முறையாக முதலிடத்தைப் பிடித்தது. கடந்த ஆண்டு ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில், இந்த வருடம் நான்கு இடங்கள் முன்னேறியது .

டெல் அவிவ் தரவரிசையில் உயர, முக்கியமாக இஸ்ரேலிய நாணயமான ஷெக்கல் உயர்ந்ததே காரணமாகும். இஸ்ரேலின் வெற்றிகரமான கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தால், அந்நாட்டு நாணயம் டாலருக்கு எதிராக உயர்ந்தது.

உலகிலேயே அதிவேகமான கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்தி வெற்றி கண்ட நாடுகளில் இஸ்ரேல் ஒன்றாகும்.

எவர் வேர்ல்ட் இன் டேட்டாவின் புள்ளிவிவரங்களின்படி , இஸ்ரேலின் மக்கள்தொகையில் 62% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டது. நவம்பர் தொடக்கத்தில், ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, அமெரிக்க டாலருக்கு எதிராக இஸ்ரேலிய ஷெக்கல் 4% அதிகரித்துள்ளது.

173 நகரங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் விலைகளை வைத்து செய்யப்பட்ட சமீபத்திய ஆராய்ச்சியில், டெல் அவிவில் பத்தில் ஒரு பங்கு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

விலைகளின் பணவீக்க விகிதம் செப்டம்பர் 2021 வரை உள்ளூர் நாணய அடிப்படையில் ஆண்டுக்கு ஆண்டு 3.5% உயர்ந்துள்ளது, இது 2020 இல் 1.9% ஆக இருந்தது.

இதற்கடுத்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் தரவரிசையில் சிங்கப்பூருடன் இணைந்து இரண்டாவது இடத்திற்குச் சரிந்தது.

உலகின் மிக விலையுயர்ந்த நகரங்கள் 2021

1. டெல் அவிவ், இஸ்ரேல்

2. பாரிஸ், பிரான்ஸ்

2. சிங்கப்பூர்

4. சூரிச், சுவிட்சர்லாந்து

5. ஹாங்காங், சீனா

6. நியூயார்க், யு.எஸ்

7. ஜெனிவா, சுவிட்சர்லாந்து

8. கோபன்ஹேகன், டென்மார்க்

9. லாஸ் ஏஞ்சல்ஸ், யு.எஸ்

10. ஒசாகா, ஜப்பான்

திருத்தம்: பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் கூட்டாக இரண்டாவது இடத்தைப் பிடித்ததை பிரதிபலிக்கும் வகையில் இந்தக் கதை புதுப்பிக்கப்பட்டுள்ளது.