“உறவு வைத்துக்கொள்ள ஆண் தேவையில்லை… இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்” – சிங்கப்பூர் பிரபல நடிகை ஜேஸ்லின் டே

Jacelyn Tay insta post doesnt need man for sex

முன்னாள் நடிகை ஜேஸ்லின் டே டேட்டிங் செய்வதில் ஆர்வம் இல்லை என தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

47 வயதான சிங்கப்பூர் பிரபலமான அவர், தொழிலதிபர் பிரையன் வோங் என்பவரை 2018 இல் விவாகரத்து செய்தார்.

அதற்கு முன்னர் இருவரும் எட்டு வருடங்கள் திருமணம் வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கு 11 வயதில் சாவியர் என்ற மகனும் உள்ளார்.

விமான கட்டணம் குறையும்.. போட்டி குறித்த கவலை – SIA எடுத்துள்ள அதிரடி முடிவு

விவாகரத்துக்குப் பிறகு தனக்கு ஆண் நண்பர்கள் யாரும் இல்லை என்றும், டேட்டிங் செய்வதிலும் எந்த ஆர்வமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் தனிமையில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

“வெளிப்படையாக, நான் இப்போது மகிழ்ச்சியாகவும், சமநிலையாகவும், அமைதியாகவும் இருக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைக்கு S$7 மில்லியன் பரிசு: துப்பு தேடும் போலீஸ் – சிங்கப்பூர் ஆடவருக்கு வலை