விமான கட்டணம் குறையும்.. போட்டி குறித்த கவலை – SIA எடுத்துள்ள அதிரடி முடிவு

உலகின் சிறந்த விமானச் சேவை: இரண்டாம் இடம் பிடித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சாதனை
SIA

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானம், தனக்கு போட்டி அதிகமாகும் என்ற கண்ணோட்டத்தில் அடுத்த 2023 ஆம் ஆண்டு விமானக் கட்டணங்களை குறைக்கும் என கூறப்பட்டுள்ளது.

தொற்றுநோய்களின் போது செயலிழந்த விமான நிறுவனங்கள் மீண்டும் தலைதூக்கும் என்பதால் போட்டி அதிகமாகும், அதனால் விமான கட்டணம் குறையும் என சொல்லப்பட்டுள்ளது.

தலைக்கு S$7 மில்லியன் பரிசு: துப்பு தேடும் போலீஸ் – சிங்கப்பூர் ஆடவருக்கு வலை

2022 ஆம் ஆண்டில் இருக்கும் வருமானம் வரும் காலங்களில் அதே அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்பதை SIA நிர்வாக துணைத் தலைவர் கமர்ஷியல் லீ லிக் ஹ்சின் தெரிவித்தார்.

அதிக எரிபொருள் விலைகள், பணவீக்க அழுத்தங்கள், அரசியல் சிக்கல்கள் மற்றும் உலகளாவிய மந்தநிலையின் ஆபத்து ஆகியவை கவலை அளிப்பதாகவும் SIA கூறியது.

மலேசியாவில் நடந்த விபத்தில் சிங்கப்பூர் பெண் உயிரிழப்பு