“சிங்கப்பூர்” என்பது தமிழ் பெயரா? சிங்கப்பூர் தமிழர்களுக்கே தெரியாத ஆச்சர்யமூட்டும் தகவல்!

Singapore and Malaysia Tamil
Singapore and Malaysia Tamil

சிங்கப்பூர் என்ற பெயரைக்கேட்ட உடனே, சிங்கத்தின் நியாபகம் நமக்கு வரும். பொதுவாக சிங்கம் என்பது சிம்ஹ என்பதில் இருந்து வந்தது என்றும், சிம்ஹ என்பது சமற்கிருதம் என்றும் கொள்வார்கள். உண்மையில் சிங்கம்-சிம்ஹ என்பது சமற்கிருதமா என்பதிலும் சந்தேகம் நிலவுகிறது. 1819 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரின் வருகைக்கு பிறகு தான் சிங்கப்பூர் என்று அழைக்கப்பட்டது என வரலாறு கூறுகிறது.

3 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் சீன பயணி ஒருவர் இந்த பகுதியை கடந்த பொழுது “பூ லுவோ சங்” என்று அழைத்தார். இதுவே மலாய் மொழியில் “இறுதியில் உள்ள தீவு” என்று அர்த்தம் கொண்டதாக அமைந்தது.

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பெயர் கொண்டு விளங்கிய சிங்கப்பூர், பதினான்காம் நூற்றாண்டில் “சிங்க புரா” என்றானது. சமஸ்கிருதத்தில் சிம்ம என்றால் சிங்கம் , புரா என்றால் நகரம். இதுவே நாளடைவில் சிங்கப்பூர் என்று மருவியதாக ஒரு கதை சொல்லப்படுகிறது.

இதுவே சிங்கப்பூர் மக்களை கேட்டால், ” சிங்க (singgah)” மலாய் மொழியில் இளைப்பாறுதல் என்று சொல்வார்கள். மன்னன் இளைப்பாற அங்கு தரையிறங்கியதால் சிங்க(singgah) + புரா(pura) (ஊர் ) என்ற இரண்டும் சேர்ந்து “சிங்கபுர”  என மாறியதாக சொல்றாங்க.

ஊர்’ என்பதும் ‘புரம்’ என்பதும் இன்றும் தமிழர்களிடையே புழங்கும் செந்தமிழ்ச் சொற்கள்தான். எனவே சிங்கப்பூர் தமிழ் பெயர் தான் என்கின்றனர் தமிழ் ஆய்வாளர்கள்.  இப்பொழுதும் சிங்கத்தலையும் மீன் உடலும் கொண்ட வியத்தகு உருவம்தான் சிங்கப்பூர் தேசிய சின்னமாகும். இதுவரை சிங்கப்பூர் பற்றிய வரலாறு அவ்வளவாக யாருக்கும் தெரியவில்லை.

நமக்கு தெரிந்த வரையில் தமிழர்களுக்கும், சிங்கப்பூருக்கும் இடையேயான தொடர்பே மிகுதியாக உள்ளது.  அதன்படி பார்த்தால், சிங்கப்பூர் என்ற பெயர் தமிழ் மொழியில் இருந்து வந்திருக்க வேண்டும் என்பதே தமிழ் ஆய்வாளர்களின் வாதமாகும்.