சிங்கப்பூர் தமிழர்களுக்கும், மலேசிய தமிழர்களுக்கும் என்ன வித்தியாசம்..? அப்பாவித்தனமா ஏமாந்து போகதீங்க! – Singapore and Malaysia Tamil

Singapore and Malaysia Tamil
Singapore and Malaysia Tamil

Singapore and Malaysia Tamil : தமிழ்நாட்டில் இருந்து வரும் தமிழர்கள், சிங்கப்பூர் வாழ் தமிழர்களை தங்கள் உறவுகள் என்று நினைத்தால் அது முட்டாள்தனம் என்கிறார் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழரான ஹரிநாராயணன்.

இணையதள விவாதம் ஒன்றில் பதிலளித்துள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார். சமூக பழக்கங்கள் மற்றும்  தனிநபர் பழக்கங்களில் அவர்கள் முற்றிலும் மாறு பட்டவர்கள்.

இந்திய தமிழர்களை இவர்கள் வெறுப்பவர்கள். இவர்களுக்கு போட்டியாகவே எண்ணுபவர்கள். இதே நிலைமை தான் இலங்கை தமிழர்கள் இடமும். நம்ம தான் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு நம் உறவுகள் என்று எல்லாம் சிலிர்த்து கொள்கிறோம்.

வெகு சிலர் இதில் சொல்லி இருப்பது போல் இல்லாமல் இருக்கலாம். பெரும்பான்மை ஆனா மக்கள் இவ்வாரே நினைக்கிறார்கள். அதனால் எனக்கும் இவர்கள் மீது பெரிய நாட்டம் இல்லை.

மலேசியா தமிழர்கள் பற்றி எனக்கும் பெரிதாக தெரியாது. அனால் அவர்களும் இவர்களை விட ரொம்ப வித்தியாசம் இருக்காது என்றார்.

ஹரிநாராயணன் கருத்தை ஏற்றுக்கொண்ட, ரேணுகா அவர்கள், போட்டியாக எண்ணுவது சிங்கப்பூரில் கண்டிருக்கிறேன். ஆனால் மலேசியாவில் நான் அறிந்தவரை இல்லை. மலேசியாவைப் பொறுத்தவரை சில முதலாளிமார்கள் இந்திய தொழிலாளர்களை நன்றான முறையில் நடத்தத் தவறியதைக் கண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அங்கே ஒரு சிலருக்கு என்ன தான் தமிழனாய் இருந்தாலும் , சிலருக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது.

தமிழ் என் மொழி, தமிழ் என் மூச்சு, தமிழ் என் பேச்சு, தமிழ் என் இனம் என்று கூறி அங்கிருப்பவர்களை உசுப்பேத்தி விட முடியாது. பல கலாச்சாரசூழ்நிலையில் வாழ்ந்த அவர்களுக்கு மற்ற மொழிகள் கற்பதன் சாதகங்கள் நன்றாக தெரியும்.