70 வருடங்களைக் கடந்த சிங்கப்பூர் தமிழர் சங்கம் குறித்த அறியப்படாத தகவல்கள்!

சிங்கப்பூர் தமிழர் சங்கம், இலாப நோக்கற்ற சங்கங்களுக்கான பதிவு சட்டத்தின் கீழ்  1950-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சுதந்திரத்திற்குப் பிறகு, முந்தைய சட்டம் ரத்து செய்யப்பட்டு 1967 இல், புதிய சங்கங்கள் உருவாக்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டது. சிங்கப்பூர் தமிழர் சங்கம் , சங்கப் பதிவேட்டின் கீழ் பதிவு செய்யப்பட்டு, சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் பிரிவு 311-ன் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.

53, Woodsville Close, Singapore 357788 என்ற முகவரியில் தனது சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தமிழ் சங்கம் நிர்வாகக் குழுவின் கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டுதலின் கீழ் உள்ளது. அவர்கள் அனைவரும் தன்னார்வலர்களாக உள்ளனர்.

சிங்கப்பூர் தமிழர் சங்கத்தின் நோக்கம்:

சிங்கப்பூரில் வழக்கமாக வசிக்கும் இந்தியர்கள், சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் தென்னிந்திய கலாச்சாரத்தை தழுவி தமிழ் மொழி பேசும் நிரந்தர குடியிருப்பாளர்களை ஒன்றிணைத்தல்.

சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களின் கல்வி, கலாச்சார, சமூக மற்றும் முன்னேற்றத்திற்காக பணியாற்றுதல்.

பொது நலனுக்காக சிங்கப்பூரில் உள்ள இந்திய மற்றும் பிற சமூகங்களுக்குள் இனங்களுக்கிடையிலான, கலாச்சார மற்றும் இணக்கமான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.

சிங்கப்பூரில் இன அல்லது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் சங்கம் ஈடுபடாது.