ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ படப்பிடிப்பு நிறைவு!

Photo: RJ Balaji Official Twitter Page

ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இந்த படத்தை ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்டப் படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். இந்த படத்தை டாக்டர் ஐசரி ஐ.கணேசின் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ளது.

சிங்கப்பூர் பிரதமர் லீ விடுப்பு: தற்காலிகப் பிரதமர் ?

இந்த திரைப்படத்தில் சத்யராஜ், தலைவாசல் விஜய் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஒரு முடி திருத்துபவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்தாண்டு கோடைக்காலத்தில் இந்த படம் திரைக்கு வரவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி! – தமிழ் தலைவாஸ் அணி வெற்றி!

படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக, நடிகர் ஆர்.ஜே பாலாஜி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அடுத்தாண்டு கோடைக்காலத்தில் திரையரங்குகளில் ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் வெளியாகவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளவர், தாடி, மீசையுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் தாடி, மீசை இல்லாமல் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.