இந்தியா- சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்ற வட்டமேசைக் கூட்டம்!

Photo: External Affairs Minister of India Official Twitter Page

இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்ற ‘இந்தியா- சிங்கப்பூர் அமைச்சர்களின் வட்டமேசைக் கூட்டம்’ தலைநகர் டெல்லியில் நேற்று (17/09/2022) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிங்கப்பூர் அரசின் சார்பில் துணை பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கான் கிம் யோங், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டையில் கடும் தீ… உள்ளே இருந்த சுமார் 25 ஊழியர்கள்: விரைந்த SCDF

அதேபோல், இந்திய அரசின் சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், வர்த்தகம் மற்றும் தொழில்துறை, ஜவுளித்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், துறை அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

ராணி 2ம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் அதிபர் ஹலிமா யாக்கோப்

இக்கூட்டத்தில் இரு நாடுகளிடையேயான வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மயமாக்கல், திறன் மேம்பாடு, தொழில்நுட்பம், கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதாரம் உள்ளிட்டவைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.