சிங்கப்பூர் அனுப்பிய மருத்துவப் பொருட்களைப் பெற்றுக் கொண்ட ஃபிஜி!

Photo: Fijian Government

கொரோனாவுக்கு எதிராக போராடும் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சிங்கப்பூர் அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் இணைந்து மருத்துவப் பொருட்களை அனுப்பி உதவி வருகின்றது. மேலும், கொரோனா தடுப்பூசி மருந்துகளையும் அனுப்பியுள்ளது.

சிங்கப்பூரில் குழந்தைகளுக்கு தடுப்பூசி: MOE பள்ளிகளில் முன்பதிவு தொடக்கம்

அந்த வகையில், ஃபிஜி (Fiji) நாட்டிற்கு சானிடைசர்கள் (Hand Sanitizer), முகக்கவசங்கள் (N95 Masks) உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை சிங்கப்பூர் அரசு சிங்கப்பூர் கார்ப்பரேஷன் எண்டர்பிரைஸ் (Singapore Cooperation Enterprise) மூலம் அனுப்பியது. நிவாரணப் பொருட்கள் நிரப்பிய இரண்டு கண்டெய்னர்கள் கப்பல் (Two Shipping Containers) மூலம் ஃபிஜி நாட்டிற்கு அனுப்பப்பட்டது.

இந்த பொருட்கள் டிசம்பர் 16- ஆம் தேதி அன்று ஃபிஜி சென்றடைந்தது. அதனை ஃபிஜிக்கான சிங்கப்பூரின் குடியுரிமை இல்லாத தூதர் சீட் செங் (Singapore’s Non-Resident High Commissioner to Fiji, Mrs Seet Cheng), ஃபிஜி நாட்டின் அட்டர்னி- ஜெனரல் ஐயாஸ் சையத் கையூமிடம் (Attorney-General Aiyaz Sayed-Khaiyum) வழங்கினார்.

பற்றி எரிந்த தீ.. 2வது மாடியில் இருந்து குதித்த ஆடவர் – இவரை காப்பாற்ற வெளிநாட்டு ஊழியர் எடுத்த முயற்சிகள் வீண்

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஃபிஜிக்கான சிங்கப்பூரின் குடியுரிமை இல்லாத தூதர் சீட் செங், “மற்ற நாடுகளுக்கு உதவ நாங்கள் சிறந்த வழிகளில் முயற்சி செய்கிறோம். இது சிங்கப்பூர் கார்ப்பரேஷன் எண்டர்பிரைஸ் ஃபிஜி அரசுக்கு வழங்கிய எங்கள் உதவியின் ஒரு சிறிய அடையாளமாகும். தொற்றுநோயுடன் அதன் சவால்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், ஒருவருக்கொருவர் உதவுவதற்கும் பொருளாதாரத்தின் முயற்சிகள் இது” என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய, ஃபிஜி நாட்டின் அட்டர்னி- ஜெனரல் ஐயாஸ் சையத் கையூம், “சரியான நேரத்தில் அளித்த ஆதரவைப் பாராட்டி, சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த அவர், நகர்ப்புறத் திட்டமிடல், டிஜிட்டல் மயமாக்கல், ஒத்துழைப்புக்கான புதிய அரங்குகள் வரை, ஃபிஜியை வலுப்படுத்த தூதர் மேரி சீட் செங்குடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர்நோக்குகிறோம்” எனத் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் கலாம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த நபர்!

இதையடையே, “ஃபிஜி போன்ற சக சிறிய தீவு மாநிலங்களின் பக்கம் சிங்கப்பூர் தொடர்ந்து நிற்கிறது” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துளளார்.