சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் மலேசிய நாட்டு கடற்படை தளபதி சந்திப்பு!

Photo: Ministry Of Defence In Singapore

மூன்று நாள் அறிமுகப் பயணமாக மலேசியா நாட்டு கடற்படை தளபதி (Malaysian Chief of Navy) அட்மிரல் (ADM) டான் ஸ்ரீ முஹமத் ரேஸா பின் முஹமத் சானி (Admiral (ADM) Tan Sri Mohd Reza bin Mohd Sany) கடந்த நவம்பர் 21- ஆம் தேதி அன்று சிங்கப்பூருக்கு வருகை தந்தார்.

இந்தியா-சிங்கப்பூர் பயணிகள் வணிக விமான சேவை: நெருக்கமாகப் பணியாற்றி வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!

அதைத் தொடர்ந்து, நேற்று (22/11/2021) மதியம் சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர் இங் எங் ஹென்- னை, அவரது அலுவலகத்தில் மலேசியா கடற்படை தளபதி நேரில் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின் போது, இருவரும் சிங்கப்பூர்க் கடற்படைக்கும் (RSN), ராயல் மலேசியன் கடற்படைக்கும் (RMN) இடையே வலுவான உறவுகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர். மேலும், பிராந்தியத்தில் பொதுவான பாதுகாப்பு சவால்களில் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர்.

சிங்கப்பூரில் மேலும் 1,461 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று!

அதேபோல், சிங்கப்பூர் பாதுகாப்பு படைத் தலைவர் லெப்டினெண்ட் ஜெனரல் மெல்வின் ஓங் (Chief of Defence Force Lieutenant-General Melvyn Ong) மற்றும் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஆரோன் பெங் ( Chief of Navy Rear-Admiral Aaron Beng) ஆகியோரையும், அவர் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.

சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக துவாஸ் கடற்படைத் தளத்தைச் சுற்றிப் பார்த்த அவர், அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

VTL பயணம்: விமான கட்டணத்தை விட COVID-19 சோதனைகளுக்கான செலவு அதிகம்

மலேசியா நாட்டு கடற்படைத் தளபதியின் வருகை சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் இடையிலான சூடான மற்றும் நீண்டகால இருதரப்பு பாதுகாப்பு உறவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆர்எஸ்என் (RSN) மற்றும் ஆர்எம்என் (RMN) இருதரப்பு பயிற்சிகள், வருகைகள், தொழில்முறை பரிமாற்றங்கள், படிப்புகளின் குறுக்கு வருகை, அத்துடன் ஐந்து சக்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் (FPDA) மற்றும் ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் (ADMM) மற்றும் ADMM- பிளஸ் போன்ற பலதரப்பு தளங்கள் மூலம் தொடர்ந்து தொடர்பு கொள்கின்றன. மலாக்கா ஜலசந்தி ரோந்து மூலம் பிராந்திய கடல் பாதுகாப்பை மேம்படுத்த இரு கடற்படைகளும் நெருக்கமாக செயல்படுகின்றன. இந்த தொடர்புகள் இரு கடற்படையினருக்கும் இடையே பரஸ்பர புரிதல் மற்றும் தொழில்முறை உறவுகளை வலுப்படுத்தியுள்ளன. இவ்வாறு சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (23/11/2021) நாடு திரும்புகிறார் மலேசியா நாட்டு கடற்படைத் தளபதி.