“சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு ‘VTL’ விமான சேவை”- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

Photo: Air India Express Official Twitter Page

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் மார்ச் 27- ஆம் தேதி முதல் சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு ‘VTL’ விமான சேவை வழங்கப்படும். சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு IX688 என்ற விமானமும், மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு IX684 என்ற விமானமும் இயக்கப்படும். வாரத்திற்கு இரண்டு விமானங்கள் இயக்கப்படும். எனினும், திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு Non-VTL விமான சேவை தொடர்ந்து வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூர் சாலையோரத்தில் படுத்த படுக்கையாக கிடக்கும் நபரை போட்டு “உதைத்து தாக்கும்” ஆடவர் – போலீஸ் விசாரணை

டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘SMRT’ நிறுவனத்திற்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரி நியமனம்!

‘VTL’ விமான சேவையில் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும்; சிங்கப்பூர் வந்ததும் பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.