‘SMRT’ நிறுவனத்திற்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரி நியமனம்!

pHOTO: SMRT (Appoints Ngien Hoon Ping as new Group CEO)

‘SMRT’ நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியன் ஹூன் பிங் (SMRT appoints Ngien Hoon Ping as new Group CEO) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வரும் ஆகஸ்ட் மாதம் 1- ஆம் தேதி அன்று பொறுப்பை ஏற்க உள்ளார் என்று ‘SMRT’ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘சிங்கப்பூர் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டிகளைக் காண அதிகமான ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர்’- சிங்கப்பூர் கால்பந்து சங்கம் அறிவிப்பு!

புதிய தலைமை நிர்வாக அதிகாரி குறித்து முழுமையான விவரங்கள் குறித்து பார்ப்போம்!

கடந்த 2016- ஆம் ஆண்டு முதல் 2020- ஆம் ஆண்டு வரை நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (Land Transport Authority- ‘LTA’) நிர்வாக அதிகாரி நியன் ஹூன் பிங் பணிபுரிந்து வந்தார். தற்போது, ஃபேர்பிரைஸ் குழுமத்தின் விநியோகச் சங்கிலி வணிகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO of FairPrice Group’s Supply Chain Business) உள்ளார். நிலப் போக்குவரத்து ஆணையத்தில் இருந்த காலத்தில் தாம்சன்- ஈஸ்ட் கோஸ்ட் லைன் (Thomson-East Coast Line), மாண்டாய் டிப்போ (Mandai Depot) மற்றும் புதிய லோர்னி நெடுஞ்சாலை (New Lornie Highway) போன்றவற்றின் உள்கட்டமைப்பு திட்டங்களை தலைமையேற்று வழிநடத்தினார்.

பங்குனி உத்திரத் திருவிழா- புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் பக்தர்கள் வழிபாடு!

வரும் மே மாதம் 1- ஆம் தேதி அன்று ‘SMRT’ நிறுவனத்தின் வாரிய இயக்குநராக நியன் ஹூன் பிங் பொறுப்பேற்பார் என்றும், தற்போது ‘SMRT’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் நியோ கியான் ஹாங் (Neo Kian Hong) வரும் ஆகஸ்ட் மாதம் 1- ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 31- ஆம் தேதி வரை நியனின் ஆலோசகராக இருப்பார் என்று ‘SMRT’ நிறுவனம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

நியன் ஹூன் பிங்கை ‘SMRT’ குடும்பத்திற்கு வரவேற்கிறோம் என்று ‘SMRT’ நிறுவனத்தின் தலைவர் சீ மூன் மிங் (Seah Moon Ming, Chairman of SMRT) குறிப்பிட்டுள்ளார்.