நவராத்திரி விழா: சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

நவராத்திரி விழா கடந்த செப்டம்பர் மாதம் 25- ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், சுவாமிக்கு நாள்தோறும் வித விதமான சிறப்பு அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளது.

ஆசையாய் iPhone 13 Pro Maxஐ ஆர்டர் செய்த சிங்கப்பூர் பெண் – வெற்றுப் பெட்டியைப் பெற்ற சோகம் !

மேலும் நாள்தோறும் 100- க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சில கோயிலிகளில் கொலு வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. அதன்படி, ஸ்ரீ வைராவிட காளியம்மன் கோயிலில் வைக்கப்பட்ட கொலுவை பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

தீபாவளி பண்டிகை: வண்ணமின் விளக்குகளால் ஜொலிக்கும் லிட்டில் இந்தியா!

நவராத்திரி விழாவின் இறுதி நிகழ்ச்சியான ஆயுதபூஜை நேற்றும், விஜயதசமி பூஜை இன்றும் நடைபெற்றது. தொழில் நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, நேற்று (04/10/2022) ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. மேலும், ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சுவாமிக்கு சரஸ்வதி அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடைபெற்றது.

சூரசம்ஹாரம் நிகழ்வுடன் இன்றுடன் நிறைவடைகிறது நவராத்திரி விழா.