தீபாவளி பண்டிகை: வண்ணமின் விளக்குகளால் ஜொலிக்கும் லிட்டில் இந்தியா!

Photo: Lisha Official Facebook Page

தீபாவளி பண்டிகை, வரும் அக்டோபர் 24- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று கொண்டாடப்படவுள்ளது. இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் புத்தாடை அணிந்து, இனிப்புகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.

சிங்கப்பூரர்களுக்கு ஆதரவு வவுச்சர்! – பணவீக்கதைச் சமாளிக்கக் கைகொடுக்கும் சிங்கப்பூர் அரசு

அந்த வகையில், சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் பாரம்பரிய சங்கம் (LITTLE INDIA SHOPKEEPERS AND HERITAGE ASSOCIATION) என்ற லிசா அமைப்பு (Lisha), தீபாவளி பண்டிகையையொட்டி (Deepavali Festival), ஆண்டுதோறும் சிங்கப்பூரில் உள்ள முக்கிய பகுதிகளில் தீபாவளி வாழ்த்துகளுடன் கூடிய அலங்கார மின்விளக்குகளை அமைக்கும். சுமார் ஒரு மாதத்திற்குள் மேலாக, இந்த மின்விளக்குகளில் ஒளியூட்டப்படும். இதற்கு ‘தீபாவளி ஒளியூட்டு’ (Light Up Ceremony) என்று அழைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பாண்டில் தீபாவளிக்கான ஒளியூட்டு, கடந்த செப்டம்பர் 16- ஆம் தேதி அன்று தொடங்கிய நிலையில், நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளுக்கு ஏற்பாடுகளை செய்துள்ளது லிசா. தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் வரும் அக்டோபர் 22- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், லிட்டில் இந்தியா, ரேஸ் கோர்ஸ் சாலை, செராங்கூன் சாலை ஆகிய சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார மின்விளக்குகள் இரவு நேரங்களில் ஜொலிப்பதை மக்கள் ஆர்வத்துடன் கண்டுக்களித்து வருகின்றனர். அத்துடன் தங்களது செல்போனில் செல்ஃபி புகைபபடத்தையும் எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக, இசைக்கருவிகள் வடிவிலான மின்விளக்குகள் இடம் பெற்றுள்ளன.

மோசமான கிளியா இருக்கும் போல! – கிளிக்கு பயந்து HDB குடியிருப்பை விற்ற பெண்

லிட்டில் இந்தியா பகுதிகளில் உள்ள கடைகளில் பொதுமக்கள் புத்தாடைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இதனால் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள கடைகளில் கடந்தாண்டை காட்டிலும், நடப்பாண்டில் தீபாவளி பண்டிகைக்கான வியாபாரம் சூடுபிடித்துள்ளதாகத் தகவல் கூறுகின்றன.