புக்கிட் படோக் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து!

Photo: Singapore Civil Defence Force Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள புக்கிட் படோக் தெரு- 31ல் (Blk 366 Bukit Batok Street 31) உள்ள பிளாக் 366 அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (14/01/2022) மதியம் 02.40 PM மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினருக்கு (Singapore Civil Defence Force- ‘SCDF’) தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின், புக்கிட் படோக் தீயணைப்பு நிலையத்தின் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றனர். அதேபோல், தகவலறிந்த காவல்துறையினரும் தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு சென்றனர்.

இந்தியா செல்லும் பயணிகள் கவனத்திற்கு!! – தெரிந்துகொள்ள வேண்டிய தற்போதைய கட்டுப்பாடுகள்

அப்போது, அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் (4TH Floor) இருந்து புகை வெளியேறியதைக் கண்டத் தீயணைப்பு வீரர்கள், சுவாசக் கருவி செட்டை அணிந்துக் கொண்டு நான்காவது மாடிக்குள் நுழைந்தனர். பின்னர், அந்த தளத்தில் இருந்து வீட்டிற்கு நுழைந்து, படுக்கையறையில் ஏற்பட்ட தீயைத் தண்ணீரைப் பீய்ச்சியடித்து அணைத்தனர்.

சிங்கப்பூரில் வழக்கு விசாரணை தொடர்பாக ஆடவர் ஒருவரை தேடிவரும் போலீஸ்

எனினும், அறையில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து தீக்கரையானது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்னதாகவே, குடியிருப்பாளர்கள் தாங்களாகவே சுயமாக வெளியேறினர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து, விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக, பொதுமக்களின் ஒருவர் தண்ணீர் குழாய் மூலம் தீயை தணித்தார். அந்த நபரை சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை, பாராட்டியுள்ளது.