இந்தியா செல்லும் பயணிகள் கவனத்திற்கு!! – தெரிந்துகொள்ள வேண்டிய தற்போதைய கட்டுப்பாடுகள்

AP/Rishi Lekhi

தொற்று பாதிப்பு அபாயம்” உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள், இந்தியா வந்தவுடன், post-arrival என்னும் பிந்தைய பரிசோதனைக்காக தங்கள் மாதிரிகளை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த பரிசோதனைக்காக ஆகும் கட்டணத்தை பயணிகளே செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

லேப்டாப் வாங்க வசதியில்லா வெளிநாட்டு ஊழியர்: நன்கொடை செய்த IRR அமைப்பு… இரட்டை சம்பளத்தில் வேலை பெற்று அசத்தல்

சோதனை முடிவுகள் வரும் வரை கண்டிப்பாக பயணிகள் விமான நிலைய வளாகத்திலேயே காத்திருக்க வேண்டும்.

“நெகட்டிவ்” முடிவு வந்தால்?

அவர்களின் சோதனை முடிவு “நெகட்டிவ்” என இருந்தால், அவர்கள் 7 நாட்களுக்கு வீட்டுத் தனிமைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

7 நாள் தனிமை முடிந்து, 8வது நாளில் RT-PCR சோதனை மேற்கொள்ளப்படும்.

மீண்டும் “நெகட்டிவ்” முடிவு வந்தால், அடுத்த 7 நாட்களுக்கு அவர்கள் தங்கள் உடல்நிலையை தாங்களே கண்காணித்து கொள்ள வேண்டும்.

“பாசிடிவ்” முடிவு வந்தால்?

அவர்கள் விமான நிலையத்தில் “பாசிடிவ்” அல்லது ஏழு நாட்களுக்குப் பிறகு “பாசிடிவ்” முடிவு வந்தால், அவர்கள் அரசாங்கத்தின் தனிமைப்படுத்தும் இட வசதிக்கு அனுப்பப்படுவார்கள்.

அவர்களது நெருங்கிய தொடர்புகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச பயணிகளில் பலர் தவறான தொலைபேசி எண்கள், முழுமை அடையாத முகவரிகளை அதிகாரிகளுக்கு வழங்குவதால், அவர்களை கண்காணிப்பதில் பல சிரமங்கள் இருப்பதாக இந்திய மாநிலங்கள் புகார் தெரிவிக்கின்றன.