மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம்?

Photo: Wikipedia

சர்வதேச மகிழ்ச்சியான நாடு என்ற பெருமையை பின்லாந்து மீண்டும் பெற்றுள்ளது. 137 நாடுகள் உள்ள இந்த பட்டியலில் 126வது இடத்தைப் பிடித்துள்ள இந்தியா, மகிழ்ச்சியற்ற நாடுகள் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளது.

சிங்கப்பூர் வேலைவாய்ப்பு: புதிதாக 3000 பேருக்கு வேலை ரெடி – பிரெஷர்ஸ்க்கு முன்னுரிமை

உலக மகிழ்ச்சி தினம் ஆண்டுதோறும் மார்ச் 20- ஆம் தேதி அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, 2023- ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையை (Happiest Countries in the World 2023) ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. நாட்டின் ஜிடிபி, சமூக ஆதரவு, சுகாதாரம், ஊழல், முடிவுகளை எடுக்கும் சுதந்திரம், நீதி உள்ளிட்டவற்றின் அடிப்படையில், இந்த அறிக்கை தயார் செய்யப்படுகிறது.

இந்த பட்டியலில், உலகத்திலேயே மகிழ்ச்சியான நாடு என்ற இடத்தை பின்லாந்து மீண்டும் பெற்றுள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, நார்வே, இஸ்ரேல், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

சிங்கப்பூரர் குடும்பங்கள் மறுசுழற்சிப் பெட்டிகளைப் பெறுவது எப்படி?- விரிவான தகவல்!

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் ஆசிய- பசிபிக் வட்டாரத்தில் தைவானைப் பின்னுக்கு தள்ளி சிங்கப்பூர் 25வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

உலகிலேயே மகிழ்ச்சியற்ற நாடுகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான், லெபனான் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்தியா 12வது இடத்தில் உள்ளது. மகிழ்ச்சியற்ற நாடுகள் அனைத்திலும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு தொடர்ந்து உயர்வதாகவும், வறுமையில் இருப்பவர்களின் நிலை மேலும் மோசமாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாறாக, மகிழ்ச்சியான நாடுகளின் பொருளாதார அடிப்படையில் பிரிந்துள்ளோருக்கு இடையேயான இடைவெளி குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆறாவது ஆண்டாக பின்லாந்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.