சிங்கப்பூரர் குடும்பங்கள் மறுசுழற்சிப் பெட்டிகளைப் பெறுவது எப்படி?- விரிவான தகவல்!

Photo: National Environment Agency

சிங்கப்பூரில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில், பல்வேறு வகையான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மார்ச் 19- ஆம் தேதி முதல் ஒவ்வொரு சிங்கப்பூரர் குடும்பங்களுக்கும் மறுசுழற்சிப் பெட்டிகள் இலவசமாக வழங்கப்படும் என்று தேசிய சுற்றுப்புற அமைப்பு (National Environment Agency) தெரிவித்திருந்தது.

“வரிசையாக வாங்கனு சொன்னது குத்தமா?” – ஊழியரை கடுமையாக தாக்கிய இருவர்

அதன் தொடர்ச்சியாக, நீல நிறத்திலான மறுசுழற்சிப் பெட்டிகள் (Blooboxes) சிங்கப்பூரர் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் 140- க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வெண்டிங் இயந்திரத்தின் (Vending Machines) மூலம் மறுசுழற்சிப் பெட்டிகளைப் பெற்றுக் கொள்ளலாம். SingPass Code, NRIC, FIN Barcode ஆகியவற்றின் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி மறுசுழற்சிப் பெட்டிகளை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த பெட்டிக்குள் இரண்டு பிரிவாகப் பிரித்து, ஒன்றில் பயன்படாத மின்னணு உதிரி பாகங்களையும், மற்றொன்றில் மறுசுழற்சி செய்யப்படும் காலி வாட்டர் பாட்டில்கள், கேரி பேக்குகள் ஆகியவற்றை போட வேண்டும். பின்னர், அவற்றை எடுத்து, குடியிருப்புக்கு அருகாமையில் வைக்கப்பட்டுள்ள மறுசுழற்சிக்கான பெட்டியில் காலி வாட்டர் பாட்டில்கள் போன்றவற்றையும், மின்னணு சாதனங்களைப் போடுவதற்கென்று வைக்கப்பட்டுள்ள பெட்டியில் அவற்றைப் போட வேண்டும்.

திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவை- பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

மறுசுழற்சிப் பெட்டியை தண்ணீரை ஊற்றிச் சுத்தம் செய்யலாம் ஒன்றும் ஆகாது. பலமுறைப் பயன்படுத்தும் வகையில் மறுசுழற்சிப் பெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. மறுசுழற்சிப் பெட்டிகளைப் பெற்றுக் கொள்ளாத சிங்கப்பூரர்கள் வரும் ஏப்ரல் 30- ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.