மார்ச் 17- ஆம் தேதி அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பௌர்ணமி பூஜை!

சிங்கப்பூரில் பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ மாரியம்மன் கோயில். இக்கோயிலில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளும் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றன. சவுத் பிரிட்ஜ் சாலையில் (South Bridge Road) அமைந்துள்ள இக்கோயிலில் விஷேச நாட்களில் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், வரும் மார்ச் 17- ஆம் தேதி அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பௌர்ணமி பூஜை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 வருட கட்டுப்பாட்டிற்கு பின் மகிழ்ச்சி..அதிகாரிகளுடன் ஐலேண்டிற்கு ஜாலி ட்ரிப் – வெளிநாட்டு ஊழியர்கள் நெகிழ்ச்சி!

அன்றைய (மார்ச் 17) தினத்தில் முழுமையாகத் தடுப்பூசிப் போட்டுக் கொண்ட பக்தர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதி உண்டு.

பால்குடம் செலுத்த விரும்புவோர் சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். http://smt.org.sg/ என்ற கோயில் இணையப் பக்கத்திலும் அவற்றை வாங்கிக் கொள்ளலாம்.

கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால்குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும்.

இந்தியா உள்ளிட்ட 66 தென்கிழக்கு ஆசிய நகரங்களுக்கு விமான சேவை விரிவு – SIA, Scoot அதிரடி அறிவிப்பு

நேர்த்திக் கடனை செலுத்திட ஒருமுறை மட்டுமே பக்தர்கள் கோயில் வளாகத்தைச் சுற்றி வர முடியும்.

கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.

கோயிலில் பக்தர்கள் அமர்ந்து பௌர்ணமி வழிப்பாட்டைப் பார்வையிடலாம். இம்மாற்றங்கள் குறித்து, உங்களின் ஒத்துழைப்பையும், புரிந்துணர்வையும் நாடுகிறோம்.

மேல் விவரங்களுக்கு, 62234064 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தைத் தொடர்புக் கொள்ளலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.