வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடத்தில் வசிப்பவர்களுக்கு மேலும் தளர்வுகள்!

foreign worker case singapore take action
Pic: Raj Nadarajan/Today

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பரிசோதனை செய்யும் நிலையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்காக, கொரோனா பரிசோதனை கருவிகள் அதிகளவில் வாங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வீட்டிலிருந்து சுயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உதவும் கருவிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில், சுகாதாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதில் ஆர்வம் காட்டும் சிங்கப்பூரர்கள்!

இந்த நிலையில் அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழு நேற்று (01/10/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடத்தில் வசிப்பவர்கள் வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனைகளில் விரைவில் ஆன்டிஜென் ரேபிட் பரிசோதனைக் கருவிகள் (Antigen Rapid Test- ‘ART’) மட்டுமே பயன்படுத்தப்படும். தங்குமிடத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கான மீள்திறன் மேம்பட்டுள்ளது. ஆகவே, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் ஒரே அறையில் உள்ளவர்களுக்கு மட்டும் தனிமைப்படுத்தும் உத்தரவுகள் இனி பிறப்பிக்கப்படும். அவர்கள் தனிமைப்படுத்தப்படும் காலம் 14 நாட்களில் இருந்து 10 நாட்களுக்குக் குறைக்கப்படும்.

முழுமையாகத் தடுப்பூசிப் போட்டுக் கொண்ட ஊழியர்களுக்கு நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டு அறிகுறிகள் இல்லையென்றால், அவர்கள் அங்கேயே அமைக்கப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தும் இடங்களிலேயே தங்கி நோய்த்தொற்றில் இருந்து குணமடைய அனுமதிக்கப்படுவர். மூன்றாவது நாளில் அவர்களுக்கு ஆன்டிஜென் ரேபிட் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

மகனை தாக்கிய தாயாருக்கு சிறைத் தண்டனை!

அப்போது அவர்களுக்குக் கிருமித்தொற்று இல்லைஎன்று பரிசோதனை முடிவு வந்தால் அவர்கள் குணமடைய அமைக்கப்பட்ட இடத்திலிருந்து வெளியேற அனுமதி வழங்கப்படும். வெளிநாட்டு ஊழியர் தங்குமிடத்தில் வசிப்பவர்களில் 90%- க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசிப் போட்டுக் கொண்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.