COVID -19: வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமான உணவுகள் வழங்கப்பட்டுள்ளன..!

Rasel Catering business operations suspended

வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்கென கட்டப்பட்ட விடுதிகளில் கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்ததிலிருந்து 10 மில்லியனுக்கும் அதிகமான உணவுப் பொட்டலங்கள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு வழங்கும் நிறுவனங்கள் அவற்றின் தரம் மற்றும் அளவு ஆகியவற்றில் அக்கறை கொண்டு தேவையான மாற்றங்களை செய்து வருகின்றனர்.

இது மிகவும் எளிதான செயல் அல்ல என்று மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகமது கடந்த புதன்கிழமை தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

சுமார் 2,00,000 ஊழியர்களுக்கு 34 நிபுணத்துவம் வாய்ந்த உணவு தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் உணவு தயாரித்து வழங்குகின்றனர்.

விடுதிகளில் வசிப்போருக்கு வழங்கப்படும் உணவுக்கான செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் உணவுப் பொட்டலத்திற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற தெளிவான தகவல் தெரியவில்லை.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 657 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

உணவு தயாரித்து வழங்கக்கூடிய நிறுவனங்களில் ஒன்றான நியோ குழுமம், சமைக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் அந்தப் பணியில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் ஊதியம் ஆகியவற்றை மட்டுமே கட்டணமாக வசூலிப்பதாகத் தெரிவித்தது.

விடுதிகளுக்கு உணவு வந்து சேர்ந்த 30 நிமிடங்களுக்குள் ஊழியர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களின் உணவு அவர்களின் சுவைக்கு ஏற்றவாறு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அவர்களில் சிலர் பொன்னி அரிசி போன்ற ஒரு குறிப்பிட்ட வகை அரிசியை விரும்புகிறார்கள், மேலும் அரிசியை நீண்ட நேரம் வேகவைக்குமாறும் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்தியாவைச் சேர்ந்த கட்டுமான ஊழியரான கந்தன் கோபிநாத், தாம் வசிக்கும் பிபிடி லாட்ஜ் 1A விடுதியில் கடந்த வாரத்தைவிட தற்போது உணவின் தரம் மேம்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

COVID -19 ன் விளைவாக சுமார் 3,00,000 தொழிலாளர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது, அதிகாரிகள், அரசு சாரா நிறுவனங்கள் (NGO) மற்றும் முதலாளிகள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர் ஆதரவு கூட்டணி ஆகியவை இணைந்து விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகளில் தங்கியிருக்கும் சுமார் 17,000 ஊழியர்களுக்கு கடந்த மூன்று வாரங்களாக உணவு வழங்கி வருகிறது.

இதையும் படிங்க: COVID-19: சிங்கப்பூரில் மொத்தம் 1,347 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர்..!