“குஜராத்தில் சிங்கப்பூர் நிறுவனங்கள் செய்த முதலீடுகள் எவ்வளவு தெரியுமா?”- விரிவான தகவல்!

"குஜராத்தில் சிங்கப்பூர் நிறுவனங்கள் செய்த முதலீடுகள் எவ்வளவு தெரியுமா?"- விரிவான தகவல்!
Photo: Singapore in India Twitter

 

இந்தியாவின் முக்கிய மாநிலங்களின் ஒன்றான குஜராத் மாநிலத்தின் தலைநகர் காந்தி நகரில் ’10வது துடிப்பான குஜராத் உலகளாவிய மாநாடு- 2024′ (10th Vibrant Gujarat Global Summit- 2024) தொடங்கியது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த மாநாட்டில், ஐக்கிய அரபு அமீரகம், திமோர் உள்ளிட்ட நாடுகளின் சேர்ந்த தலைவரும், மிகப்பெரிய தொழில் நிறுவனங்களின் தலைவர்களும், தலைமைச் செயல் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

சிங்கப்பூர் தந்தை திரு.லீ குவான் யூ கண்ணீர் விட்டு அழும் காட்சியை படம்பிடித்த ஒரே ஒருவர் காலமானார்

ஜனவரி 11- ஆம் தேதி தொடங்கிய உச்சி மாநாடு, ஜனவரி 13- ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஜப்பான், சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள், குஜராத் மாநிலத்தில் தொழில் முதலீடுகளைச் செய்யவுள்ளன. குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல் முன்னிலையில், தொழில் நிறுவனங்களுக்கும், குஜராத் அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது.

குறிப்பாக, சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் சிங்கப்பூர் தூதர் சைமன் ஆகியோர் குஜராத் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். மாநாடு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிங்கப்பூர் அரங்கத்தை சிங்கப்பூர் தூதர் சைமன் வோங் திறந்து வைத்தார்.

சாங்கி விமான நிலையத்தில் வெளிநாட்டவர்கள் மூவரை மடக்கிய போலீஸ் – S$508,925 பணத்துடன் தப்பிக்க முயற்சி

குஜராத் மாநிலத்தில் சிங்கப்பூர் நிறுவனங்கள் சுமார் 27,000 கோடியை முதலீடுகளை செய்யவுள்ளனர்; ஆற்றல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை நிறுவனங்கள் செய்யவுள்ளனர் என்று சிங்கப்பூர் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, சிங்கப்பூர் தூதர் தலைமையில் சிங்கப்பூர் நிறுவனங்களின் பிரதிநிதிகள், குஜராத் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்துப் பேசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.