சாங்கி விமான நிலையத்தில் வெளிநாட்டவர்கள் மூவரை மடக்கிய போலீஸ் – S$508,925 பணத்துடன் தப்பிக்க முயற்சி

சிங்கப்பூர் வரும் அல்லது செல்லும் பயணிகளின்
shawnanggg/Unsplash

சிங்கப்பூரை விட்டு வெளியேறும் முன்னர் முறையான தகவல் கொடுக்காமல் பணத்தை எடுத்துச்செல்ல முயன்ற வெளிநாட்டவர் மூவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

சுமார் S$508,925 ரொக்க பணத்தை எடுத்துச் செல்ல இருந்த அவர்கள் அது குறித்து ஏதும் அறிவிப்பு செய்யவில்லை என கூறப்பட்டுள்ளது.

“பயிற்சி இல்லாத வேலையை பார்க்க சொன்னா என்ன பண்றது” – இரு ஊழியர்களின் மரணமும்.. நிறுவனத்தின் அஜாக்கிரதையும்..

இந்நிலையில், தப்பிக்க முயன்ற மூன்று மியான்மர் நாட்டவர்களும் தண்டிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களின் பெயர்கள்; க்யாவ் மின் ஓ, வை சாய் துன் மற்றும் வின் மியின்ட் என்று சிங்கப்பூர்க் காவல் படை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியது.

சிங்கப்பூருக்குள் நுழையும் அல்லது வெளியேறும் பயணிகள் S$20,000 அல்லது அதற்கு நிகரான வெளிநாட்டு பணத்தை ரொக்கமாக எடுத்துச் சென்றால், அது குறித்து முன்னரே அறிவிப்பு செய்வது சட்டப்பூர்வமான தேவையாகும்.

சாங்கி விமான நிலைய முனையம் 1 இன் புறப்பாடு இடத்திலிருந்து மூன்று பேர் சம்மந்தப்பட்ட வழக்கு குறித்து தங்களுக்கு தகவல் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் அந்த மூன்று பேரும் குற்றவாளி என நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டதாகவும், அபராதம் விதிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தில் பயணிப்போர் கவனத்திற்கு.. ஜூன் 1 முதல் இதை மட்டுமே பயன்படுத்த முடியும்