பொதுப் போக்குவரத்தில் பயணிப்போர் கவனத்திற்கு.. ஜூன் 1 முதல் இதை மட்டுமே பயன்படுத்த முடியும்

பொதுப் போக்குவரத்துக் கட்டணத்தைச் செலுத்த SimplyGo EZ-Link அல்லாத கார்டுகளையும், NETS FlashPay கார்டுகளையும் வரும் ஜூன் 1 முதல் பயன்படுத்த முடியாது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அறிவித்துள்ளது.

EZ-Link அட்டையானது சில்லறைக் கட்டணங்களுக்கும் செல்லுபடியாகாது என்று சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் S$1.17 மில்லியன் ஜாக்பாட் பரிசைத் தட்டி தூக்கிய அதிஷ்டசாலி – துள்ளிக்குதித்து ஆரவாரம்

இருப்பினும், NETS FlashPay கார்டுகள் மூலமாக ERP மற்றும் பார்க்கிங் போன்ற மோட்டார் தொடர்பான கட்டணங்களுக்கு அவற்றை தொடர்ந்து பயன்படுத்தப்படலாம்.

பொதுப் போக்குவரத்து கட்டண பரிவர்த்தனைகளில் மூன்றில் இரண்டு பேர் தற்போது SimplyGo EZ-Link அல்லது வங்கி அட்டைகளைப் பயன்படுத்துகின்றன, எனவே இந்த மாற்றத்தால் பெரும்பாலான பயணிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று LTA தெரிவித்துள்ளது.

மேலும், இதனால் சலுகை அட்டைகளைப் பயன்படுத்தும் முதியோர், மாணவர்கள், வேலைக் கட்டணப் போக்குவரத்து சலுகைத் திட்டத்தில் உள்ள அட்டைதாரர்கள் மற்றும் உடற்குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகள் போன்றோர் பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அது சொன்னது.

SimplyGo மூலமாக எவ்வளவு கட்டணம் என்பதை உடனடியாக அறிந்துகொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதாவது, செயலி (App) இல்லாதவர்கள் கூட டிக்கெட் வழங்கும் இயந்திரங்களிலேயே தங்கள் பயண பரிவர்த்தனைகள் எவ்வளவு மற்றும் கார்டு கையிருப்பு எவ்வளவு உள்ளது என்பதை பார்க்கலாம்.

இந்திய வம்சாவளி ஆடவரின் பலே திட்டம்.. மருத்துவ செலவுகளை தெரிந்தவர்கள் தலையில் கட்டிவிட்டு தப்பிக்க முயற்சி