இந்திய வம்சாவளி ஆடவரின் பலே திட்டம்.. மருத்துவ செலவுகளை தெரிந்தவர்கள் தலையில் கட்டிவிட்டு தப்பிக்க முயற்சி

வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

முதுகுவலியால் பாதிக்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆடவர் ஒருவர், சிங்கப்பூர் முழுவதும் உள்ள பல மருத்துவமனைகள் மற்றும் பாலிகிளினிக்குகளுக்குச் சென்று சிகிச்சைப் பெற்றுக்கொண்டார்.

மருத்துவ கட்டணத்திற்கு லோகேஸ்வரன் மோகன்தாஸ் என்ற தன்னுடையப் பெயரை பதிவு செய்வதற்குப் பதிலாக சகோதரர் ஒருவர் பெயரையும், அவருக்கு தெரிந்த இன்னொருவரின் பெயரையும் பதிவு செய்து ஏமாற்றியுள்ளார்.

வேலை செய்த இடத்தை விட்டு ஓடிய வெளிநாட்டு பணிப்பெண் – தேடிவரும் முதலாளி

இதனால் மருத்துவச் செலவுக்கான கட்டணத்தை செலுத்துமாறு அவர்கள் இருவருக்கும் ஆவணங்கள் சென்றதாக கூறப்பட்டுள்ளது.

கட்டண ஆவணங்களை பெற்ற அவரின் சகோதரர், இது குறித்து போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையில், 42 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூரர் மோகன்தாஸ், ஏமாற்றியது உட்பட ஐந்து, ஆறு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

இதனை அடுத்து அவருக்கு நேற்று ஜனவரி 8 அன்று ஆறு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூர் TOTO லாட்டரி: ஆண்டு தொடக்கமே அமோகம்.. வெற்றி பரிசை அள்ளிச்சென்ற அதிஷ்டசாலிகள்