வேலை செய்த இடத்தை விட்டு ஓடிய வெளிநாட்டு பணிப்பெண் – தேடிவரும் முதலாளி

foreign maid flees home Singapore employer appeals for information
TODAY

சிங்கப்பூரில் வேலை செய்த இடத்தை விட்டு ஓடிய வெளிநாட்டு பணிப்பெண்ணை பொங்கோலில் உள்ள முதலாளி குடும்பம் தேடிவருகிறது.

உரிமம் பெறாத கடன்முதலைகளிடம் இருந்து பணத்தைக் கடனாக வாங்கிக்கொண்டு, பணிப்பெண் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியதாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் TOTO லாட்டரி: ஆண்டு தொடக்கமே அமோகம்.. வெற்றி பரிசை அள்ளிச்சென்ற அதிஷ்டசாலிகள்

இந்நிலையில், இந்தோனேசியாவை சேர்ந்த அந்த பணிப்பெண்ணை தேடிவருவதாக முதலாளி குடும்பம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இக்கா லெஸ்டரி (Ika Lestari) என்ற 40 வயதான ஆசிரியை வீட்டில் பணிப்பெண் வேலைசெய்து வந்ததாக கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 5) வெளியான சமூக ஊடகப் பதிவுகளில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டில் இருந்து ஓடிய இந்தோனேசிய பணிப்பெண் மேமனா, கடைசியாக வெள்ளிக்கிழமை மாலை பொங்கோ இன்டர்சேஞ்சில் காணப்பட்டார் என இக்கா கூறியுள்ளார்.

பணிப்பெண் தாம் கடன் வாங்கி இருப்பதை இக்காவிடம் ஒருமுறை கூறியுள்ளார். அதன் பின்னர் மூன்று வெவ்வேறு கடன் கொடுத்தோருக்கு சுமார் S$3,950 கடன் தொகையை செலுத்த இக்கா உதவியுள்ளார்.

ஆனாலும், இக்காவும் அவரது கணவரும் கடன் கடன்முதலைகளால் துன்புறுத்தப்படுவதாக கூறியுள்ளனர்.

கடந்த ஜன.5 பிற்பகல் 2.30 மணியளவில் இக்கா வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ​​பூட்டியிருந்த அவரின் அலமாரியை உடைந்து இருந்ததாக கூறினார்.

சோதித்தபோது, அதில் இருந்த மேமனாவின் பாஸ்போர்ட், பைகள் மற்றும் உடைகள் ஆகியவற்றை அவர் எடுத்துக்கொண்டு தப்பி ஓடியது தெரியவந்தது.

இதனை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் பொங்கோல் அக்கம்பக்கத்து போலீஸ் நிலையத்தில் இக்கா புகார் செய்தார்.

பின்னர் மேமானாவின் வேலை அனுமதியை ரத்து செய்ய கோரியும் மனிதவள அமைச்சகத்தை அவர் தொடர்பு கொண்டார்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகிறது.

“வேலையை விட்டு தூக்கிட்டோம்” – திடீரென வந்த அறிவிப்பு.. அழுது புலம்பிய ஊழியர்கள்