“வேலையை விட்டு தூக்கிட்டோம்” – திடீரென வந்த அறிவிப்பு.. அழுது புலம்பிய ஊழியர்கள்

திடீரென "உங்களுக்கு வேலை இல்லை" என்றதும் ஊழியர்கள் அழுது புலம்பியதாவும், என்ன செய்ய போகிறோம் என்று
(Photo: Reuters)

சிங்கப்பூரில் உள்ள அலிபாபா குழுமத்தின் தென்கிழக்கு ஆசியப் பிரிவான லாசாடா மின்னணு வர்த்தக நிறுவனம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதாக எந்த முன்னறிவிப்புமின்று கூறியுள்ளது.

அங்கு பணிபுரியும் ஊழியர்களை பிரதிநிதிக்கும் தொழிற்சங்கத்திடம், இது குறித்து ஏதும் கூறாமல் லாசாடா நிறுவனம் ஆட்குறைப்பு செய்ததாக சொல்லப்பட்டுள்ளது.

லிட்டில் இந்தியாவில் விழுந்த மரம்.. கார், லாரி உட்பட 6 வாகனங்கள் பாதிப்பு

அது மட்டுமின்றி மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பல்வேறு இடங்களில் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும் அது கூறியதாக மலேசியாவைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

எந்தவித முன்னறிவிப்பு மற்றும் ஆலோசனைகள் இன்றி சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களை வேலையை விட்டு தூக்கியது குறித்து தொழிற்சங்கத்திடம் அந்நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் எதிர்வரும் காலங்களில் ஆட்குறைப்பு செய்யும் அவசியம் இருந்தால் தொழிற்சங்கத்திடம் முதலில் ஆலோசனை செய்வதாவும் அது ஒப்புக்கொண்டது.

ஆனால், இப்போது ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிவிட்டு பின்னர் அறிவிப்பு செய்தது ஏமாற்றம் அளிப்பதாகவும் தொழிற்சங்கம் குறிப்பிட்டது.

திடீரென “உங்களுக்கு வேலை இல்லை” என்றதும் ஊழியர்கள் அழுது புலம்பியதாவும், என்ன செய்ய போகிறோம் என்று தெரியாமல் மலைத்துபோய் நின்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதை “நியாயமற்றது” என்று கூறிய சில ஊழியர்கள், வெளிப்படைத்தன்மை இல்லாமல் வேலையை விட்டு தூக்கியது சக ஊழியர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியதாக கூறினர்.

புதிய ஆண்டு தொடக்கத்திலேயே சோதனை: வெளிநாட்டு ஊழியர்களுக்கே எதிராய் அமையும் வேலைகள்

புதிய ஆண்டு தொடக்கத்திலேயே சோதனை: வெளிநாட்டு ஊழியர்களுக்கே எதிராய் அமையும் வேலைகள்