புதிய ஆண்டு தொடக்கத்திலேயே சோதனை: வெளிநாட்டு ஊழியர்களுக்கே எதிராய் அமையும் வேலைகள்

migrant worker without work pass illegal entry caning
Google Maps.

ஜுரோங் ரீஜியன் லைன் (JRL) என்னும் வேலையிடத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 27 வயதான வெளிநாட்டு ஊழியர் உயிரிழந்தார்.

கடந்த ஜனவரி 4 அன்று அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தில், சுமார் 7.5 மீ உயரத்தில் விழுந்த கட்டுமான ஊழியரான அவர் இறந்தார் என்று கூறப்பட்டுள்ளது.

லிட்டில் இந்தியாவில் விழுந்த மரம்.. கார், லாரி உட்பட 6 வாகனங்கள் பாதிப்பு

அவர் மியன்மாரைச் சேர்ந்த ஊழியர் என்றும், அன்று அதிகாலை 2:30 மணியளவில் கட்டி முடிக்கப்படாத மேடையின் விளிம்பில் இருந்து விழுந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்து ஜுரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 75 இல் நடந்தது, அங்கு Gek Poh MRT ரயில் நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

பின்னர் அவர் Ng Teng Fong பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

புதிய ஆண்டு தொடங்கிய சில நாளிலேயே வெளிநாட்டு ஊழியரின் மரணச் செய்தி மனதை கணக்கச் செய்கிறது.

உங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள், வேலையின்போது பாதுகாப்பாக இருங்கள்.

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்த ஐவர் – குற்றவாளிகள் என அதிரடி தீர்ப்பு